பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..

Viral Video Of Young Woman Torturing Her Mother : ஒரு கொடூரமான வைரல் வீடியோவில், தனது தாயை, மகள் அடித்து துன்புருத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது, தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 1, 2025, 11:46 AM IST
  • தாயை கொடுமை படுத்திய மகள்!
  • அடித்து துன்புறுத்திய வீடியோ..
  • நெட்டிசன்கள் ஆவேசம்
பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..

Viral Video Of Young Woman Torturing Her Mother : சமீப காலமாக, இணையத்தில் வெளியாகும் வீடியோக்கள் பல மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்களும், டீன்-ஏஜ் வயதில் இருப்பவர்களும் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் எக்ஸ் தளங்களில் வரும் வீடியோக்கள் மனதை நொறுக்கும் வகையில் இருக்கின்றன. 

Add Zee News as a Preferred Source

இந்தியாவில், மாமியார் மருமகளை கொடுமை படுத்துவதும், மருமகள் மாமியாரை வஞ்சிப்பதும், சில ஆண்டுகளுக்கு முன்பு இயல்பாக நடந்து வந்தது. இப்போது, பெரும்பாலான மாமியார்களும் மருமகள்களும் தங்களுக்குள் ஒத்து வரவில்லை என்றால் பிரிந்து விடுகின்றனர். ஆனால், அதையும் தாண்டி ஆங்காங்கே மாமியார்-மருமகள் சண்டை மாள்வது நடந்துதான் வருகிறது. ஆனால், அதற்கு மாறாக மகளே தாயை கொடுமை படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளம் பெண்ணும், கொஞ்சம் வயதான அவரது தாயாரும் மெத்தை மீது அமர்ந்திருக்கின்றனர். அதில், அந்த இளம் பெண் வயதான பெண்மணியை போட்டு அடிக்க ஆரம்பிக்கிறார். அந்த பெண்மணியோ தன்னை விட்டுவிடுமாறு அவரிடம் கெஞ்சுகிறார். அதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண் போட்டு முடியை பிடித்து இழுத்து, அவரது தொடையிலும் காதிலும் கடிக்கிறார்.

அடிப்பதற்கு இடையே, அந்த பெண் ஏதோ கேள்வி கேட்டு அவரை அடிக்கிறார். அந்த வயதான பெண்ணோ, தன்னை விட்டுவிடுமாறு மீண்டும் மீண்டும் அடித்து துன்புறுத்துகிறார். அது மட்டுமன்றி, அந்த 2 பெண்கள் மட்டும் அங்கு தனியாக இல்லை. யாரோ நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களிடம் இதை நிறுத்துமாறு அந்த பெண் சொல்கிறார். அவர்கள் அதை கண்டு கொள்வதாக வீடியாேவில் தெரியவில்லை. தற்போது இணையத்தில் தீயாக பரவி வரும் இந்த வீடியோ, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் சண்டிகர் நகரில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட வீடியோ எங்கு இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

நெட்டிசன்கள் ஆவேசம்:

இந்த வீடியோ, பல பிரபலமான பேஜ்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதில் ஹரியான போலீஸார் மற்றும் பிரதமர் நரேந்திர மாேடியையும் டேக் செய்து இது குறித்து ஆக்ஷன் எடுக்குமாறு  வலியுறுத்தி வருகின்றனர். பலர், இந்த பெண்ணை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்றும், அந்த பெண்ணுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..

மேலும் படிக்க | ஆண்கள் பற்றியும் யோசிங்க... மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை - ஷாக்கிங் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

About the Author

Trending News