சொந்த தந்தையை அடித்து கொடுமை படுத்திய மகள்கள்-இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

Viral Video Of Daughters Torturing Their Father : தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மகள்கள், தங்களது தந்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2025, 06:59 PM IST
  • தந்தையை கொடுமை படுத்திய மகள்கள்..
  • உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ..
  • உண்மை என்ன?
சொந்த தந்தையை அடித்து கொடுமை படுத்திய மகள்கள்-இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

Viral Video Of Daughters Torturing Their Father : சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் நம் மனதை கலங்க வைக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கையில், இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில் வாழ்கின்றனரா? என்று கேட்க தோன்றுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

வைரலாகும் வீடியோ..

இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும் அந்த வீடியோவில் தனது மகள்களின் கையால் கொடுமைப்படுத்தப்படும் அந்த நபரின் பெயர், ஹரேந்திர மௌர்யா என்று கூறப்படுகிறது. இவரை, அவரது மகள்கள் குச்சியை வைத்து அடிக்க, ஹரேந்திராவின் மனைவி அவரது கால்களை அழுத்தமாக பிடித்து வைத்துக்கொள்கிறார். அதே போல, அந்த வீடியோவில் ஹரேந்திரா வலி தாங்க முடியாமல் கத்துவதும்-கதறுவதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அடித்துக்கொண்டிருக்கும் அந்த பெண்ணின் தம்பி, அதனை நிறுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அந்த பெண்ணோ, உனக்கும் அடி விழும் என்று மிரட்டுகிறார். இவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க அடி வாங்கும் அந்த வயதானவர் எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால் அவரை அவரது மனைவி பிடித்ததை விடவே இல்லை. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் பலர் இணையத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

Viral Video

தற்கொலையா? கொலையா?

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதில் அடி வாங்கிய ஹரேந்திரா, சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது உடலை மீட்ட போலீஸார், அதனை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் மருத்துவ ஆய்வு வெளியில் வந்தால் மட்டுமே இது கொலையா அல்லது தற்கொலையா என்ற விவரம் வெளிவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்தது எப்படி?

உயிரிழந்த ஹரேந்திரா ஒரு எலக்ட்ரீஷியன். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தாரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது, ஹரேந்திரா அவரது மனைவியுடன் சண்டையிட்டது தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி ஹரேந்திரா தனது 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார். அதன் பிறகு அவரது மனைவி, ஹரேந்திராவை விட்டு பிரிவதாகவும், தனது தாய்-தந்தை விட்டுக்கு செல்வதாகவும் கூறியிருக்கிறார். இதன் பிறகு ஹரேந்திரா தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், அதன் பிறகு அவரது குடும்பத்தார் அவரை தூக்கிட்ட நிலையில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அக்கம் பக்கத்தினர் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூற, அவரது உறவினர்களோ அவரது குடும்பத்தினரே அவரை கொன்று விட்டு நாடகமாடுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த வழக்கு விசாரணை தற்போத நடந்து வருகிறது.

மேலும் படிக்க | பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம்! திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News