)
இந்தியாவில் ரயில் பயணங்கள் முக்கியமான ஒன்றாக உள்ளது. பல மக்கள் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். காரணம் குறைந்த விலையில் பயணம் செய்ய முடியும். இந்திய மக்களின் வாழ்க்கையில் ரயில் பயணம் ஒரு அங்கமாக உள்ளது. தற்போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடலாம். ஆனால், சில சமயங்களில் நாம் செய்யும் சிறிய தவறுகள், பயணத்தின் போது பெரிய சிரமங்களை ஏற்படுத்திவிடும். அப்படியான ஒரு பொதுவான தவறு தான், எங்கிருந்து ஏறுகிறோம் என்பதை தவறாக தேர்ந்தெடுப்பது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு என்ன? போர்டிங் நிலையத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நம்மில் பலரும் அவசரமாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, புறப்படும் ரயில் நிலையத்தை கவனிக்க தவறிவிடுவோம். உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டிய ஒரு பயணி, "சென்னை எழும்பூர்" என்பதற்கு பதிலாக, "தாம்பரம்" என்று தவறுதலாக தேர்ந்தெடுத்துவிட வாய்ப்புள்ளது. இந்த தவறை சரி செய்யாமல், அவர் சென்னை எழும்பூர் நிலையத்திற்கு சென்று ரயிலில் ஏற முயற்சித்தால், டிக்கெட் பரிசோதகர் அவரை அனுமதிக்க மறுக்கலாம். காரணம், முன்பதிவு செய்யப்பட்ட போர்டிங் நிலையத்திலிருந்து தான் பயணி ஏற வேண்டும்.
அதற்கு முன்போ அல்லது பின்போ ஏற கூடாது. குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து பயணி ஏறவில்லை என்றால், அந்த சீட்டை காத்திருப்பு பட்டியலில் உள்ள அடுத்த பயணிக்கு ஒதுக்கி விடுவார்கள். இதனால், நீங்கள் டிக்கெட் எடுத்திருந்தும் பயணிக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, போர்டிங் நிலையத்தை முன்கூட்டியே மாற்றுவது மிகவும் அவசியம். அதற்கும் இந்திய ரயில்வே ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்திய ரயில்வே, பயணிகள் போர்டிங் நிலையத்தை மாற்றிக்கொள்ள சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, Confirmed Ticket வைத்திருக்கும் பயணிகள் போர்டிங் நிலையத்தை ஒரு முறை மாற்றி கொள்ள முடியும். ஒருமுறை மாற்றிவிட்டால், மீண்டும் பழைய நிலையத்திற்கோ அல்லது வேறு ஒரு நிலையத்திற்கோ மாற்ற முடியாது. ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை மட்டுமே போர்டிங் நிலையத்தை ஆன்லைனில் மாற்ற முடியும். அதற்குப் பிறகு மாற்ற இயலாது. IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது.
ரயில் நிலைய கவுன்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிலைய அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிப்பதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம். RAC அல்லது காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது. டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் மாற்ற முடியும். போர்டிங் நிலையத்தை மாற்றுவதற்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.
IRCTC கணக்கில் உள்நுழைந்து My Account பகுதிக்கு சென்று Booked Ticket History என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். Change Boarding Point விருப்பத்தை கிளிக் செய்து, புதிய நிலையத்தை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் மாற்ற விரும்பும் புதிய போர்டிங் நிலையத்தை கவனமாக தேர்ந்தெடுக்கவும். புதிய நிலையத்தை தேர்ந்தெடுத்த பிறகு, Confirm பட்டனை கிளிக் செய்து, உங்கள் மாற்றத்தை உறுதிப்படுத்தவும். மாற்றம் வெற்றிகரமாக செய்யப்பட்டதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ