)
CBSE Result 2025: மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பங்கேற்ற லட்சக்கணக்கான மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கான கவுண்டவுன்கள் தற்போது தொடங்கியுள்ளது. சில தகவலின் படி, CBSE தேர்வு முடிவுகளை மே 10 முதல் 15 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். அதிகாரப்பூர்வ தேதித் தகவல் விரைவில் CBSE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் வெளியிடப்படும்.
42 லட்சம் மாணவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரும்:
இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வில், 24.12 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வையும், 17.88 லட்சம் மாணவர்கள் இடைநிலைத் தேர்வையும் எழுதியிருந்தனர். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 18 வரை CBSE ஆல் நடத்தப்பட்டன, அதேபோல் 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4, 2025 வரை நடத்தப்பட்டது. வாரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்தம் 24.12 லட்சம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதியுள்ளனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
எங்கே, எப்படி தேர்வு முடிவைச் சரிபார்ப்பது?
தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன நிலையில் தேர்வு முடிவுகளை CBSE இணையதளமான cbse.gov.in, DigiLocker portal results.digilocker.gov.in இல் ஆன்லைனில் சரிப்பார்க்கலாம். இதனுடன், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் உமாங் செயலி அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியும்.
CBSE தேர்வு முடிவுகளை 2025 சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள்:
cbseresults.nic.in
cbse.gov.in
cbse.nic.in
results.cbse.nic.in
CBSE தேர்வு 2025 முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
CBSE Board Result 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும்
உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்
உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.
எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 / 10 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.
DigiLocker இல் தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
digilocker.gov.in ஐப் பார்வையிடவும்.
உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் (10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு).
தேவையான விவரங்களை உள்ளிடவும்: பள்ளி குறியீடு, ரோல் எண், 6 இலக்க பாதுகாப்பு.
"நெக்ஸ்ட்" என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP ஐச் சரிபார்க்கவும்: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
செயல்முறை முடிந்ததும், உங்கள் DigiLocker கணக்கு செயல்படுத்தப்படும்.
தொடர 'Go to DigiLocker account' என்பதைக் கிளிக் செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ