CBSE 10,12ம் தேர்வு முடிவுகள்.. எப்போது வெளியீடு, எங்கு சரிப்பார்ப்பது

CBSE 10th, 12th Result 2025: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான முழு விவரத்தை இங்கே பெறுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2025, 08:49 PM IST
  • இது தொடர்பான முழு விவரத்தை இங்கே பெறுங்கள்.
  • சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு
CBSE 10,12ம் தேர்வு முடிவுகள்.. எப்போது வெளியீடு, எங்கு சரிப்பார்ப்பது

CBSE 10th, 12th Result 2025 Date: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 அன்று முடிந்தது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவுபெறுகிறது. 2024-25 வாரியத் தேர்வுகளை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். வாரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்தம் 24.12 லட்சம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதியுள்ளனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025: எப்போது வெளியீடு?
CBSE பொதுவாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்கும். கடந்த ஆண்டுகளின் அடிபடையில், 2025 ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன்படி அதிர்காரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் மாணவர்கள் தங்கள் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் சரிப்பார்க்கலாம். இது தவிர மாணவர்கள் SMS அல்லது DigiLocker மூலமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை சரிப்பார்க்கலாம்.

CBSE தேர்வு முடிவுகளை 2025 சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள்:
cbse.gov.in
results.cbse.nic.in

CBSE தேர்வு 2025 முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
CBSE Board Result 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும்
உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்
உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.

எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 / 10 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.

எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.

DigiLocker இல் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
digilocker.gov.in ஐப் பார்வையிடவும்.
உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் (10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு).
தேவையான விவரங்களை உள்ளிடவும்: பள்ளி குறியீடு, ரோல் எண், 6 இலக்க பாதுகாப்பு.
"நெக்ஸ்ட்" என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP ஐச் சரிபார்க்கவும்: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
செயல்முறை முடிந்ததும், உங்கள் DigiLocker கணக்கு செயல்படுத்தப்படும்.
தொடர 'Go to DigiLocker account' என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | வக்பு மசோதாவை கொண்டு வர என்ன காரணம்? - புட்டு புட்டு வைத்த அமித் ஷா

மேலும் படிக்க | வக்பு மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு - ஆ.ராசா ஆவேசப் பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News