CBSE Result 2025 Grace Marks : இந்தியா-பாகிஸ்தான் போர்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கவலையடைந்திருக்கும் நிலையில், தேர்வு எழுதியவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்கப்படும் விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.
CBSE தேர்வு முடிவுகள்:
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. கடந்த மே 7ஆம் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் சூழல் நிலவி வந்தது. இதனால், CBSE தேர்வு முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, தேர்வெழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த முடிவுகள் மே 13அம் தேதியான இன்று வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைதளங்களான cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகியவற்றில் சரி பார்க்காலாம். இதை தவிர்த்து, SMS வாயிலாகவும், Digilocker மற்றும் UMANG செயலி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
எழுந்திருக்கும் முக்கிய கேள்வி!
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்த பரபரப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே எழுந்திருக்கும் நிலையில், அவர்களின் மனங்களில் இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு, மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்கப்படுமா என்பதுதான்.
கிரேஸ் மார்க் என்றால் கருணை மதிப்பெண் என்று பொருள். மாணவர்கள் சிலர், தேர்ச்சி பெறுவதற்கு சில மதிப்பெண்கள் பின்தங்கி இருந்தால், இந்த கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படும், இதற்கு தகுதி பெற்றவர்கள் என்ற விவரத்தை இங்கு பார்ப்போம்.
CBSE ஏன் கிரேஸ் மார்க் இரண்டாவது பட்டியலை வெளியிட வேண்டும்?
ஒரு மாணவரின், மொத்த ஆண்டின் செயல்திறன் நன்றாக இருந்து, தேர்வில் அந்த மாணவர் எதிர்பார்த்த அளவு மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், நியாயத்தை உறுதி செய்வதற்காக இரண்டாவது பட்டியலை வெளியிடுவது குறித்து சிபிஎஸ்இ பரிசீலிக்கலாம்.
முதல் பட்டியலில் மதிப்பெண்கள் சரியாக கணக்கிடப்படவில்லை என்றால், கிரேஸ் மார்க் வழங்கப்பட அது வழிவகுக்கும்.
கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் அல்லது பள்ளிகள் மதிப்பெண்கள் குறித்து புகாரளித்தால், கூடுதல் கருணை மதிப்பெண்களை வழங்க CBSE முடிவு செய்யலாம்.
யாருக்கெல்லாம் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்?
மாணவர்கள் ஏதாவது பாடத்தில் சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தால் அவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்கப்பட பரிசீலனை செய்யப்படும்.
கருணை மதிப்பெண்கள் பொதுவாக முக்கிய பாடங்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன, விருப்ப அல்லது கூடுதல் பாடங்களுக்கு வழங்கப்படாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ