)
How To Check CBSE 10th Compartment Test Results: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு (CBSE 10th Compartment Test) முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்த துணைத் தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 898 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியிருந்தனர்.
அந்த வகையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்த தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வத்தளமான cbse.gov.in, Cbseresults.nic.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும், Umang செயலி மற்றும் DigiLocker செயலி மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பதிவெண், பள்ளி எண், அட்மிட் கார்ட், PIN நம்பர் ஆகியவை வைத்து தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு எழுதிய 1 லட்சத்து 38 ஆயிரத்து 898 மாணவர்களில் 67 ஆயிரத்து 620 மாணவரகள் மட்டும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 48.68 ஆகும். அதே நேரத்தில் அதில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 51.04 மற்றும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 47.41 ஆகும். இந்த துணைத் தேர்வு, மாணவர்கள் தங்கள் கல்வி நிலையை மேம்படுத்திக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி, உயர்கல்விப் பாதைகளுக்கான தகுதியைப் பெறவும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் பட்டியலைப் பெற அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் பட்டியல் பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் தங்களின் மையத்தில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சரிபார்ப்பு செயல்முறை ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் தொடங்கும். தேவைப்படும்பட்சத்தில், மாணவர்கள் மறுமதிப்பீட்டைக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
- முதலில், cbse.gov.in அல்லது Cbseresults.nic.in உள்ளிட்ட அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தை அணுகுங்கள்.
- முகப்பு பக்கத்தில், CBSE Class 10th Supplementary Exams என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அதில் உங்களின் பதிவு எண், அட்மிட் கார்ட் எண், பள்ளி எண், பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- கிளிக் செய்த உடன் திரையில் உங்களின் தேர்வு முடிவுகள் தெரியும். அதை நீங்கள் தரவிறக்கம் செய்துகொண்டு பிரின்ட் அவுட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ