CBSE Board Result 2024: 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானப் பிறகு, தற்போது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவையும் சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது. இதை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் 93.60 சதவீதம் தேர்ச்சி:
12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதை அடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரிய 10 ஆம் வகுப்பில் 22 லட்சத்து 51 ஆயிரத்து 812 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 குழந்தைகள் தேர்வெழுதினர். தற்போது முடிவு வந்துள்ள நிலையில், இவர்களில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க | சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; 87.98% தேர்ச்சி!


சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம்?
சிபிஎஸ்இ cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in, results.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
CBSE Board Result 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்
உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்
உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.


எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.


இதனிடையே இந்தத் தேர்வுகள் 1,88,558 உதவிக் கண்காணிப்பாளர்களின் உதவியுடன் 94,279 அறைகளைப் பயன்படுத்தி 7612 தேர்வு மையங்களில் மூன்று நாட்கள் நடைபெற்றன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 13, 2024 வரை நடைபெற்றன. சுமார் 39 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினர். கடந்த ஆண்டின் போக்குகளைப் பார்க்கும்போது, ​​2023 ஆம் ஆண்டில், சிபிஎஸ்இ முடிவுகள் மே 12 அன்று அறிவிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், இது ஜூலை 22 அன்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பை அறிவித்தது. வாரியத் தேர்வில் 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | CBSE 12ம் தேர்வு முடிவுகள் வெளியானது; சிபிஎஸ்இ ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ