CBSE 12th Result 2021: நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடந்து ஜூலை 21க்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்ய வேண்டும் என கல்வி வாரியம் பள்ளிகளுக்கு கூறியிருந்தது. ஆனால், தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடித்து வருகிறது. இதைகிடையில் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முடிவுக்காக மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பதால், ஜூலை 31க்குள் தேர்வு முடிவுகளை (Exam Results) வெளியிடுவதாக சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.


ALSO READ |10 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இந்த தேதியில் அறிவிக்கப்படும்; cbse.nic.in


இந்நிலையில் தற்போது சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியாகிறது. www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த  பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், மதிப்பெண்களின் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


 



 


அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகளை காணும் செயல்முறையை இங்கே காணலாம்:
*cbse.gov.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்குச் செல்லவும். 
*முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ரிசல்ட்’ டேபை கிளிக் செய்யவும்.
*CBSE Exam Results (சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்) என்ற புதிய பக்கத்துக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
*Secondary School Examination 2021ல் கிளிக் செய்யவும்.
*சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ரோல் நம்பர், மைய எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடியை உள்ளிடவும்
*Submit ஆப்ஷனைக் க்ளிக் செயவும். 
*உங்கள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவு திரையில் தோன்றும்.
*இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.


சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு:
*12-ம் வகுப்புப் பருவத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் அல்லது பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40% மதிப்பெண்கள் வழங்கப்படும்.
*11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்கள் வழங்கப்படும்.
*10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்கள் வழங்கப்படும்.


ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR