2026 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகளை CBSE வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் பதிவேற்றப்பட்டுள்ளன.
வழக்கமான மாணவர்களுக்கான அட்மிட் கார்டு பள்ளிகள் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது CBSE வாரியம், தற்போது மாணவர்கள் தானாகவே பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் அட்மிட் கார்டை தாங்களே பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
CBSE தேர்வுகள் வரும் பிப்ரவரி 17, 2026 முதல் தொடங்க உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 11 தேதியும், 12 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. தனித்தேர்வர்களுக்கு அட்மிட் கார்டு ஏற்கனவே வெளியான நிலையில், பள்ளி மாணவர்களுக்கு நேற்று வெளியாகியுள்ளது.அட்மிட் கார்டில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் மற்றும் தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அட்மிட் கார்டை பதிவிறகக்ம் செய்வதுடன் அதனை பிரிண்ட் எடுத்து வைத்துகொள்ளவும். மாணவர்கள் தேர்வுகக்கு செல்வதற்கு முன்பு கட்டாயம் அட்மிட் கார்டை எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் இதில் மாணவர்களின் அடையாள அட்டை, புகைப்படம் குறித்து இடம்பெற்றுருக்கும். மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தேசிய அளவில் சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு அட்மிட் கார்டை https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வயிலாக பெற்றுக் கொள்ளலாம். இதனை மாணவர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதால், பள்ளிகள் வழியாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில் https://www.cbse.gov.in/ என்கிற CBSE அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Pariksha Sangam என்கிற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்வுக்கான அட்டவணை
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதி முடிவடைகிறது. அதேசமயம் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு பிப்ரவரி 17 முதல் தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் இந்த இரண்டு வகுப்புகளுக்குமான முடிவுகள் மே, 2026 மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - பாலியல் தொல்லை... டிரம்பின் அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கிய சிறுமி - பின்னணி என்ன?
மேலும் படிக்க - இந்தியாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! 500% வரி விதிக்க டிரம்ப் பச்சைக்கொடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









