CBSE Result 2025: சிபிஎஸ்இ 10, 12 தேர்வு முடிவுகள்.. இன்று கட்டாயம் வெளியீடு?

CBSE Board Result 2025 Latest Update: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று ரிசல்ட் எப்படியும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2025, 10:42 AM IST
  • CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 எப்போது வெளியாகிறது?
  • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை எங்கு, எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம்.
  • CBSE தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE Result 2025: சிபிஎஸ்இ 10, 12 தேர்வு முடிவுகள்.. இன்று கட்டாயம் வெளியீடு?

CBSE Board Result 2025 Latest Update: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 அன்று முடிந்தது. அதேபோல் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 24.12 லட்சம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதி இருந்தனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 எப்போது வெளியாகிறது?
சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் 10 ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அப்படி இல்லையெனில் வருகிற 15 ஆம் தேதிக்குள் ரிசல்ட் எப்படியும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் சிபிஎஸ்இ இன்னும் வெளியிடவில்லை.

இதனிடையே கடந்த வாரம் வியாழக்கிழமை தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் தங்களின் மாநில தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. எனினும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால், சிபிஎஸ்இ மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை எங்கு, எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம்.

CBSE தேர்வு முடிவுகளை சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள்
* cbseresults.nic.in
* cbse.gov.in
* cbse.nic.in
* results.cbse.nic.in

CBSE தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
* சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். 
* CBSE Board Result 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும். 
* உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும். 
* உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும். 
* கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.

SMS மூலம் தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 / 10 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.

இந்த அதிகாரப்பூர்வ இணைப்புகளை மட்டும் பயன்படுத்தவும்:

- results.cbse.nic.in
- cbse.gov.in
- digilocker.gov.in

DigiLocker இல் CBSE 2025 முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

- அதிகாரப்பூர்வ DigiLocker வலைத்தளத்திற்கு செல்லவும் - digilocker.gov.in.
- 10 ஆம் வகுப்பு/12 ஆம் வகுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பள்ளி குறியீடு, ரோல் எண் மற்றும் உங்கள் பள்ளி வழங்கிய 6 இலக்க பாதுகாப்பு பின் போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
- அனைத்து புலங்களும் நிரப்பப்பட்டவுடன், 'அடுத்து' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- தொடர, OTP ஐ உள்ளிட்டு "சமர்ப்பி" என்பதை அழுத்தவும்.
- உங்கள் சான்றுகளை கணினி சரிபார்த்த பிறகு, உங்கள் DigiLocker கணக்கு செயல்படுத்தப்படும்.
- உங்கள் டாஷ்போர்டை அணுக "Go to DigiLocker account" என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் CBSE வாரிய முடிவு 2025 ஆவணங்கள் பிரிவின் கீழ் கிடைக்கும்.

UMANG செயலி மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

UMANG செயலியைப் பதிவிறக்கவும்.
ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் லாக் இன் செய்யவும்.
CBSE வகுப்பு 10/12 முடிவு 2025 ஐச் சரிபார்க்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ரோல் எண் போன்ற உங்கள் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
திரையில் காட்டப்படும் உங்கள் முடிவைச செக் செய்யவும்.

மேலும் படிக்க | CBSE Result 2025 முக்கிய அப்டேட்: இன்று வருகிறதா ரிசல்ட்? 5 எளிய வழிகளில் செக் செய்யலாம், இதோ முழு செயல்முறை

மேலும் படிக்க | இந்த இணையதளத்தில் CSBE தேர்வு முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News