Exam Results 2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முதல் வாரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை சரிபார்க்க அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ வலைத்தளங்களைப் பார்க்க வேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையான ஆதாரங்களை மட்டுமே நம்பும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | CBSE Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இங்கு சரிபார்க்கவும்
இந்த ஆண்டு புதிய நடைமுறை
CBSE 2025 மதிப்பெண் பட்டியலை பெற மாணவர்கள் தங்களின் உள்நுழைவு ஐடி மூலம் எளிதாக அணுகலாம். அதில் உங்கள் பதிவு எண், அனுமதி அட்டை ஐடி, பள்ளி குறியீடு மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்கள் கேட்கப்படும். மாணவர்களின் கல்வி முடிவுகளை அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதை இது உறுதி செய்கிறது. கூடுதலாக, 2024-25 கல்வியாண்டு முதல், CBSE வாரியம்ஒரு புதிய ஒப்பீட்டு தர நிர்ணய முறையை அமல்படுத்தியுள்ளது. பாரம்பரிய மதிப்பெண்கள் அடிப்படையிலான மதிப்பீட்டைப் போலல்லாமல், இந்த அமைப்பு மாணவர்களை அவர்களின் சக மாணவர்களுடன் ஒப்பிடுகிறது, இது அவர்களின் செயல்திறனைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. இந்த மாற்றம் ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் மாணவர் சமூகத்தில் தனிப்பட்ட பலம் மற்றும் முன்னேற்றத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது.
தேர்ச்சி விகிதம்
இந்த ஆண்டு நாடு முழுவதும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற CBSE பொதுத்தேர்வில் மொத்தம் 42 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 4 ஆம் தேதியும் முடிவடைந்தது. 2024 ஆம் ஆண்டில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.60%ஐ எட்டியது. மொத்தம் 22,38,827 மாணவர்கள் தேர்வு எழுதினர், அதில் 20,95,467 மாணவர்கள் தங்கள் தேர்வில் வெற்றி பெற்றனர். அதே போல 12ம் வகுப்பில் 16,21,224 மாணவர்கள் தேர்வு எழுதி அதில் 14,26,420 மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in, மற்றும் results.cbse.nic.in போன்ற தளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | CBSE தேர்வு முடிவுகள் எப்போது? இந்த தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ