CBSE Result 2025 முக்கிய அப்டேட்: இன்று வருகிறதா ரிசல்ட்? 5 எளிய வழிகளில் செக் செய்யலாம், இதோ முழு செயல்முறை

CBSE Result 2025 Latest News: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2025, 08:43 AM IST
  • CBSE Result 2025 முக்கிய அப்டேட்.
  • தேர்வு முடிவுகள் எப்போது வரும்?
  • தெரிந்துகொள்ள எளிய வழி இதோ.
CBSE Result 2025 முக்கிய அப்டேட்: இன்று வருகிறதா ரிசல்ட்? 5 எளிய வழிகளில் செக் செய்யலாம், இதோ முழு செயல்முறை

CBSE Result 2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக மாணவர்களும் பெற்றோரும் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்று மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வதற்கான 5 எளிய வழிகள் பற்றி இங்கே காணலாம். 

CBSE Class 10, 12 Results 2025, Websites: அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

- முதலில் cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

- முகப்புப் பக்கத்தில், 10/12 ஆம் வகுப்பு முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

- பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற சான்றுகளைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

- உங்கள் 10, 12 தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.

- அவற்றை எதிர்கால பயன்பாட்டிற்கு பதிவிறக்கம் செய்து சேவ் செய்துகொள்ளவும்.

CBSE Class 10, 12 Results 2025: DigiLocker மூலம் CBSE 2025 முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

- Digilocker ஐப் பயன்படுத்தி CBSE 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டை 2025 PDF-ஐ பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் பள்ளி வழங்கிய 6 இலக்க அணுகல் குறியீடு, பள்ளி குறியீடு மற்றும் CBSE தேர்வு பட்டியல் எண்ணுடன் Digilocker போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். 
- பின்னர் உங்கள் மொபைல் எண்ணை உறுதிசெய்து பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
- இப்போது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் Digilocker இல் லாக் இன் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ஆவணங்கள் பிரிவுக்குச் சென்று, உங்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டையை, அதாவது மார்க் ஷீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 

UMANG App: உமங் செயலி மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

- முதலில் Play Store இலிருந்து UMANG செயலியைப் பதிவிறக்கவும்.
- மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
- Class 10, 12 results 2025 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
- இங்கு CBSE 10வது, 12வது மதிப்பெண் அட்டைகளை PDF பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- CBSE மதிப்பெண் அட்டைகளை PDF வடிவில் சேவ் செய்து அதன் ஹார்ட் காப்பியை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

IVRS: IVRS மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

- CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் தங்கள் முடிவுகளை ஊடாடும் குரல் மறுமொழி அமைப்பு (IVRS) மூலம் தெரிந்துகொள்ளலாம்.
- இதற்கு மாணவர்கள் 24300699 என்ற எண்ணுக்கு முன்னர் தங்கள் பகுதியின் குறியீட்டு எண்ணுடன் டயல் செய்ய வேண்டும்.

CBSE 10th, 12th Result 2025: SMS மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

- இதற்கு மாணவர்கள் CBSE 10 மற்றும் 12 (ரோல் எண்), (பள்ளி எண்), (மைய எண்) ஆகியவற்றை 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | CBSE Result 2025: சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு? ரிசல்ட் இங்கே சரிபார்க்கவும்

மேலும் படிக்க | CBSE Result 2025: இன்றே வருகிறதா ரிசல்ட்? முதல் 30 நிமிடங்கள் மிக முக்கியம், இதை செய்வது மிக முக்கியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News