இனி ஆன்லைன் டெலிவரி சீக்கிரம் வீட்டிற்கு வராது! அமலுக்கு வரும் புதிய விதிகள்!

நிறுவனங்கள் தங்களை 10 நிமிடத்திற்குள் பொருள்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், இதனால் விபத்துகளும் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jan 13, 2026, 03:01 PM IST
  • 10 நிமிட டெலிவரிக்கு ஆப்பு!
  • மத்திய அரசின் அதிரடி.
  • பிலிங்கிட் எடுத்த முக்கிய முடிவு!
இனி ஆன்லைன் டெலிவரி சீக்கிரம் வீட்டிற்கு வராது! அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள் போன்றவை ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டன. அதன் பிறகு உணவுகள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது. தற்போது இவை மாறி காய்கறிகள், பழங்கள் உட்பட மல்லிகை பொருட்கள் கூட 10 நேரத்தில் வீட்டிற்கு ஹோம் டெலிவரி செய்யும் வசதிகளும் வந்துள்ளது. இன்னிலையில் இந்த பொருள்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக மத்திய அரசு தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் புத்தாண்டு தினத்தின்போது swiggy, zomato, blinkit போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Add Zee News as a Preferred Source

காரணம் தாங்கள் பார்க்கும் வேலைக்கு சரியான ஊதியம் கிடைப்பதில்லை என்றும், எங்களின் பணிக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நிறுவனங்கள் தங்களை 10 நிமிடத்திற்குள் பொருள்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், இதனால் விபத்துகளும் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் இவை தங்களுக்கு அதிகமான மண உளைச்சலை தருவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு 3 குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு! டிக்கெட் புக்கிங், சிறப்பு ரயில் அப்டேட்

மத்திய அரசு அதிரடி முடிவு 

இந்த போராட்டம் இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது. இதனை அடுத்து மத்திய அரசு இதில் தலையிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தொழிலாளர் நல சங்கம் இந்த விஷயத்தில் நேரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களிடம் எப்படி பத்து நிமிடத்தில் டெலிவரி செய்ய முடியும்? அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட விளம்பரத்தில் உள்ளது போல பத்து நிமிடத்தில் டெலிவரி செய்ய முடியுமா? இப்படி தவறான விளம்பரங்களை வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாது என்றும் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் எதிர்ப்பை அடுத்து பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான பிலிங்கிட் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்ற வாசகத்தை நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக சில நிமிடங்களில் டெலிவரி என்று மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இனி 10 நிமிடங்களுக்குள் எந்த ஒரு பொருளும் ஹோம் டெலிவரி செய்யப்படாது என்றும், கூடுதலாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

டெலிவரி ஊழியர்கள்

பொதுவாக சாலைகளில் ஸ்விக்கி, ஜோமேட்டோ, பிலிங்கிட் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அசுர வேகத்தில் செல்வார்கள். காரணம் குறிப்பிட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேள்வி கேட்பார்கள். அதே சமயம் அவர்களின் ஊதியத்திலும் கை வைப்பார்கள். தற்போது மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதால் டெலிவரி ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். மேலும் இது அந்த ஊழியர்களின் உயிரை பாதுகாக்கும்  அம்சமாகவும் அமைந்துள்ளதால் பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர். பிலிங்கிட் நிறுவனத்தை போலவே மற்ற டெலிவரி நிறுவனங்களும் இதனை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஜனவரி 2026 -இல் 60% ஆகும் அகவிலைப்படி: டிஏ உயர்வு, சம்பள உயர்வு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News