)
அனைவருக்கும் தாங்கள் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்கிற கனவு எப்போதும் இருக்கும். இதனை நனவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு சொந்த வீடு என்ற இலக்கை நோக்கிய ஒரு மத்திய அரசு "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா" (PMAY) ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2025 ஜூலை மாத நிலவரப்படி, இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2.81 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்காக செயல்படுத்தப்படுகிறது. மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமப்புறம் திட்டம் கிராமப்புறங்களில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு வீடுகளை கட்டித் தருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

நகர்ப்புற மக்களுக்கான நன்மைகள்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பல வழிகளில் அரசு உதவி செய்கிறது. தகுதியான பயனாளிகள் வாங்கும் வீட்டு கடனுக்கு 6.5% வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் 20 ஆண்டுகள் வரையிலான கடன் காலத்திற்கு பொருந்தும். மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) சொந்தமாக வீடு கட்ட அல்லது தற்போதுள்ள வீட்டை விரிவாக்கம் செய்ய ரூ.1.5 லட்சம் மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் மலிவு விலை வீடுகளில், EWS பிரிவினருக்கான ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு ரூ.1.5 லட்சம் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவர்கள் வீட்டின் உரிமையாளராகவோ அல்லது இணை விண்ணப்பதாரராகவோ இருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கிராமப்புற மக்களுக்கான நன்மைகள்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சமவெளி பகுதிகளில் வீடு கட்ட ரூ.1,20,000 மற்றும் மலைப்பாங்கான அல்லது கடினமான பகுதிகளில் வீடு கட்ட ரூ.1,30,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. வீட்டுக்கான நிதி உதவியுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) கீழ் 90 முதல் 95 நாட்கள் வரை வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும், கழிப்பறை கட்டுவதற்காக ரூ.12,000 தனியாக வழங்கப்படுவதுடன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்படும்.
புதிய இலக்குகள்
தகுதி வரம்புகள்
இந்த திட்டத்தில் தகுதி பெற குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து, பயனாளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். தகுதியுள்ள மக்கள், அதிகாரப்பூர்வ PMAY இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து, தங்கள் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த திட்டம், கோடிக்கணக்கான இந்தியர்களின் சொந்த வீடு கனவை நனவாக்கி, அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதில் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ