)
Pradhan Mantri Mudra Loan: தற்போது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று வேலை வாய்ப்பின்மை தான். பல படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலையை பார்த்து வருகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இளைஞர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு மத்திய அரசு கடன் உதவி வழங்குகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் GDPஐ நம்பி தான் உள்ளது.
அந்த வகையில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கினால் இந்தியாவின் பொருளாதாரமும் நன்கு வளர்ச்சி அடையும். அதனை கருத்தில் கொண்டு இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற மத்திய அரசு பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம் என்ற பெயரில் இளைஞர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை பிணையமில்லா கடனை வழங்குகிறது. இந்த திட்டத்தில் எப்படி கடன் பெறுவது? இதற்கான தகுதிகள் என்ன? யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம்
மற்ற கடன் திட்டத்தை போல பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தில் கடன் பெற, நீங்கள் எந்த ஒரு சொத்து விவரங்களையோ, டெபாசிட்டோ சமர்ப்பிக்க தேவையில்லை. மற்ற வீட்டுக்கடன், நகை கடன் போல அசையும், அசையா சொத்துக்களை அடமானமாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தால் போதும், உங்களுக்கு கடன் வழங்கப்படும். தேசிய வங்கிகளில் முத்ரா திட்டத்தில் கடன்கள் வழங்கப்படுகிறது. உங்களுடைய தொழிலை பொறுத்து உங்களுக்கான கடன் தொகை நிர்ணயிக்கப்படும். உதாரணமாக சிஷு கடனில் ரூ.50,000, கிஷோர் கடனில் ரூ.5 லட்சம், தருண் கடனில் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
கடன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?
சொந்த தொழில் தொடங்க விரும்பம் இருக்கும் அனைவருக்கும் முத்ரா திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு அடிப்படை தகுதி நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும், உங்களுடைய தொழில் கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கக் கூடாது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற சில அடிப்படை ஆவணங்கள் தேவைப்படும். உங்கள் தொழில் பற்றிய முழுமையான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே தொழில் செய்து வருபவராக இருந்தாலும், தொழிலை விரிவுப்படுத்த இந்த திட்டத்தில் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்காக நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. ஒரு வருடம் முதல் ஐந்து வருட காலத்திற்குள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் போதும். முத்ரா கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று பயனடையலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ