FASTag Rs. 3000 Pass: இந்தியாவில் உள்ள டோல்கேட்டுகளில் ரூபாய் 3000 கட்டணம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால் 200 முறை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FASTag Rs. 3000 Pass: இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடி மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. முன்பு டோல்கேட்டுகளில் கட்டணங்கள் பணமாக வசூலிக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஃபாஸ்டேக் (FASTag) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஃபாஸ்டேக்-ல் (FASTag) ரீசார்ஜ் செய்து கொண்டால் டோல்கேட்டில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு டோல்கேட்டையும் கடக்கும்போது பணம் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வாகன ஓட்டிகளின் நேரம் மிச்சப்படுத்தப்பட்டது.
ரூ.3000 வருடாந்திர பாஸ்!
தற்போது மத்திய அரசு டோல்கேட் கட்டணங்கள் சம்பந்தமாக புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்கள் ரூபாய் 3000 கட்டணம் செலுத்தி பாஸ் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கமற்ற கார்கள், வேன்கள், ஜீப்கள் இதன் மூலம் ஒரு வருடத்திற்கு 200 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஃபாஸ்டேக் (FASTag) மூலம் தான் செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த புதிய 3000 பாஸ் திட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த பாஸ் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலைகளில் அதிகமாக பயணிப்பவர்களுக்கு ரூபாய் 8000 முதல் 10 ஆயிரம் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3000 பாஸ் பெற்றால் ஒரு வருடம் அல்லது முதல் 200 பயணங்களுக்கு இந்த பாஸ் செல்லுபடி ஆகும். அதன்பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த புதிய முயற்சி பயணிகளுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
— Nitin Gadkari (@nitin_gadkari) June 18, 2025
In a transformative step towards hassle-free highway travel, we are introducing a FASTag-based Annual Pass priced at ₹3,000, effective from 15th August 2025. Valid for one year from the date of activation or up to 200 trips—whichever comes…
இந்திய தேசிய நெடுஞ்சாலை
தற்போது இந்தியாவில் ஒவ்வொரு 60 கிலோ மீட்டருக்கும் ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் 60 கிலோமீட்டருக்கு உள்ளேயே இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், இந்த பாஸ் திட்டம் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. விரைவில் ஃபாஸ்டேக் (FASTag) பதில் சாட்டிலைட் ஜிபிஎஸ் மூலம் ஒவ்வொரு வாகனமும் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்கிறதோ, அதனை பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் இது போன்று தான் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதன் முன்முயற்சியாக தான் இந்த 3000 பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ