)
இந்தியாவில் காசநோய் (TB) ஒரு பெரும் சுகாதார சவாலாக இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலகின் 27% காசநோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் வகையில், மத்திய அரசு 2018ல் 'நிக்ஷய் போஷன் யோஜனா' (Nikshay Poshan Yojana - NPY) என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காசநோயாளிக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது சிகிச்சை காலம் முழுவதும் வழங்கப்படும். சமீபத்தில், இத்திட்டம் 2025 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது காச நோயாளிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நிக்ஷய் போஷன் யோஜனா
நிக்ஷய் போஷன் யோஜனா, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இது தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) ஒரு பகுதி ஆக உள்ளது. இந்தியாவை 2025-க்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் நோக்கம் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. காச நோயாளிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் 2 பேர் காச நோயால் இறக்கின்றனர். தற்போது இத்திட்டம் மூலம் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
திட்டத்தின் நோக்கம்
நிக்ஷய் போஷன் யோஜனாவின் முதன்மை நோக்கம், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு வழங்கி, சிகிச்சையை உயர்த்துவதே ஆகும். நோயாளிகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, சிறந்த உணவு, மருந்துகள், சிகிச்சை வழங்கப்படுகிறது. இது நிக்ஷய் போர்ட்டல் மூலம் நோயாளிகளை கண்காணிக்க உதவும். இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவது இதன் இறுதி இலக்கு ஆகும்.
- ஒவ்வொரு நோயாளிக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை, சிகிச்சை காலம் முழுவதும் வழங்கப்படுகிறது.
- இந்த தொகை ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
- சில மாநிலங்களில் ரூ.1,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து உணவு கூடை வழங்கப்படும்.
- தனிநபர்கள், அமைப்புகள் நோயாளிகளை ஏற்று, குறைந்தது 6 மாதம் ஆதரவு வழங்கலாம்.
தகுதி மற்றும் ஆவணங்கள்
இந்த திட்டத்தில் பயன்பெற இந்திய குடிமகமான இருக்க வேண்டும். ஏப்ரல் 1, 2018 அல்லது அதற்குப் பிறகு நிக்ஷய் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு இல்லை. காச நோய் உடைய அனைவரும் உதவி பெறலாம்.
விண்ணப்ப முறை
உங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு சுகாதார மையம் சென்று, காச நோய் படிவம் பெற்று, விவரங்கள் நிரப்பி, ஆவணங்கள் இணைக்கவும். ஆன்லைனில் https://nikshay.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதன் பிறகு நிக்ஷய் போர்ட்டலில் விவரங்கள் உள்ளிடப்படும். வங்கி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உதவித்தொகை டெபாசிட் செய்யப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ