)
இந்தியாவில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்து, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு "புதிய ஸ்வர்ணிமா" (New Swarnima Scheme for Women) என்ற சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி, தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களிடையே சுயதொழில் தொடங்கும் ஆர்வத்தை வளர்ப்பதும், அவர்களுக்கு குறைந்த வட்டியில் நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதும், அதன் வழி நிதி சுதந்திரத்தை உறுதி செய்வதுமே இந்த திட்டத்தின் மைய நோக்கமாகும்.
புதிய ஸ்வர்ணிமா 'ஸ்வர்ணிமா' திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
தகுதி வரம்புகள்
விண்ணப்பதாரர், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம், கைவினை பொருட்கள், சிறு வணிகம், போக்குவரத்து மற்றும் சேவைத்துறை போன்ற பல்வேறு தொழில்களுக்கு இந்த கடன் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடனை, 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது. கடனை காலாண்டு தவணைகளில் செலுத்த வேண்டும். இதில், கடனைத் திருப்பி செலுத்த தொடங்குவதற்கான 6 மாத கால அவகாசமும் அடங்கும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள மாநில சேனலைசிங் ஏஜென்சி அலுவலகத்தை அணுக வேண்டும். அங்கே, இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்று, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள SCA அலுவலகத்தை தெரிந்துகொள்ள, https://nsfdc.nic.in/channel-patrners/scas என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு 18001023399 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ