ஏப்ரல் 5 ஆம் தேதி TVs, Refrigerators, ACs-க்களை அணைக்க தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்

நாடு எதிர்கொள்ளும் முக்கியமான காலகட்டத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நாட்டு மக்களை விளக்கு ஏற்ற சொன்ன பிரதமரின் கருத்தை அடுத்து, மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களை போக்க சனிக்கிழமை மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

Updated: Apr 4, 2020, 06:24 PM IST
ஏப்ரல் 5 ஆம் தேதி TVs, Refrigerators, ACs-க்களை அணைக்க தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்
File Photo

புது டெல்லி: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு விளக்கு மட்டும் அணைக்க வேண்டுமா? அல்லது அனைத்து மின்சாதன பொருட்களையும் அணைக்க வேண்டுமா? என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டு உள்ள நிலையில், அதுக்குறித்து சந்தேகத்கை போக்கும் வகையில், மத்திய அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "வீடுகளில் தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏ.சி.க்களை அணைக்க வேண்டாம் என்றும் "வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" எனக் கூறப்பட்டு உள்ளது. 

நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியான கால கட்டத்தில், 2020 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு "ஒரே விளக்குகளை மட்டும் தானாக முன்வந்து அணைக்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மின்சாரம் சமநிலை குறித்த அச்சத்தை தீர்ப்பதற்கு மின் அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

 

மருத்துவமனைகளில் உள்ள விளக்குகள் உட்பட பொதுபயன்பாடுகளான நகராட்சி சேவைகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவை மையங்களில் இது கடைபிடிக்கப்படாது. அதேபோல "தெரு விளக்குகள், தொலைக்காட்சிகள், வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் போன்ற சாதனங்களை அணைக்க சொல்லவில்லை என மின் அமைச்சகத்தின் இந்திய அரசாங்கத்தின் செயலாளர் சஞ்சீவ் நந்தன் சஹாய் அறிக்கையில் தெளிவுபடுத்தினார். 

பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மேலும் அவர்கள் வழக்கம்போல அனைத்து சாதனங்களையும் தொடர்ந்து இயக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

 

கொரோனா வைரஸைத் தோற்கடிப்பதற்கான நாட்டின் "ஒன்றுமையை" காண்பிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்கள் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகள் அல்லது மொபைல் போன் டார்ச்ச்களை ஒளிரச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார்.