)
August Month Bank Holidays List: பணப் பரிவர்த்தனை உட்பட பல்வேறு வகையான தேவைகளுக்கு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் வங்கிகல் எப்பொழுதும் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. வங்கி வேலைகள் இருந்தால் அவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
சனிக்கிழமைகள் விடுமுறை: மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறையாக இருக்கும். இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வங்கிகள் இயங்காது.
ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை: ஞாயிற்றுக்கிழமைகளான ஆகஸ்ட் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும்.
ஆகஸ்ட் 8 விடுமுறை: ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று சிக்கிம் மாநிலத்தில் மட்டும் விடுமுறை கொடுக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 12 விடுமுறை: ஆகஸ்ட் 12 செவ்வாய்கிழமை அன்று ரக்ஷாபந்தனை முன்னிட்டு ராஜஸ்தான், உத்தரகாண்ட், உ.பி. தேசிய தலைநகரம் டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
ஆகஸ்ட் 13 விடுமுறை: ஆகஸ்ட் 13 புதன்கிழமை அன்று தேசபக்தர் தினத்திற்காக (Patriots Day) இம்பாலில் (மணிப்பூர்) வங்கிகள் செயல்படாது.
ஆகஸ்ட் 15 விடுமுறை: ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 16 விடுமுறை: ஆகஸ்ட் 16 சனிக்கிழமை அன்று பாத் (குஜராத்), ஐஸ்வால் (மிசோரம்), போபால் மற்றும் ராஞ்சி (மத்தியப் பிரதேசம்), சண்டிகர் (UT), சென்னை (தமிழ்நாடு), டேராடூன் (உத்தரகாண்ட்), காங்டாக் (சிக்கிம்), ஹைதராபாத் (தெலுங்கானா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), கான்பூர் மற்றும் லக்னோவில் உள்ள வங்கிகள் (சத்தீஸ்கர்), ஷில்லாங் (மேகாலயா), ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்), மற்றும் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய பகுதிகளில் ஜன்மாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
ஆகஸ்ட் 19 விடுமுறை: ஆகஸ்ட் 19 செவ்வாய் கிழமை அன்று மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளுக்காக அகர்தலாவில் (திரிபுரா) வங்கிகள் மூடப்படும்.
ஆகஸ்ட் 25 விடுமுறை: ஆகஸ்ட் 25 திங்கட்கிழமை அன்று ஸ்ரீமந்த சங்கரதேவாவின் திருபவ திதியை முன்னிட்டு குவஹாத்தியில் (அஸ்ஸாம்) வங்கிகள் மூடப்படும்.
ஆகஸ்ட் 27 விடுமுறை: ஆகஸ்ட் 27 புதன்கிழமை அன்று அகமதாபாத் (குஜராத்), பேலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் (மகாராஷ்டிரா), பெங்களூரு (கர்நாடகா), புவனேஷ்வர் (ஒடிசா), சென்னை (தமிழ்நாடு), ஹைதராபாத் (தெலங்கானா), பனாஜி (கோவா), மற்றும் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் விநாயக சதுர்த்தி மற்றும் பூஜை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
ஆகஸ்ட் 28 விடுமுறை: ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை அன்று புவனேஷ்வர் (ஒடிசா) மற்றும் பனாஜி (கோவா) ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் விநாயகர் சதுர்த்தி மற்றும் நுவாகாய் பண்டிகையின் இரண்டாவது நாளுக்காக மூடப்படும்.
விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்: ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலின் படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 15 நாட்கள் செயல்படாது. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து வங்கிகளும் 15 நாட்கள் மூடப்படும் என்பது அர்த்தமில்லை. ஏனெனில் வங்கி விடுமுறைகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகின்றன என்பதை கவனித்ததில் கொள்ளுங்கள்.
திட்டமிட்டுங்கள்: உங்களுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய வேலை இருந்தால் இந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ