எல்லையில் பிடிப்பட்ட சீன நபர், ஹாக்கிங் செய்ய சிம்கள் கடத்தியதாக திடுக்கிடும் தகவல்
கடத்தப்பட்ட சிம் பின்னர் சீனாவில், இந்திய கணக்குகளை ஹேக் செய்வதற்கும் இந்தியாவில் பிற நிதி மோசடிகளை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
மால்டாவின் சுல்தான்பூர் பகுதியில், இந்திய பங்களா தேஷ் எல்லையில் இருந்து சென்ற வியாழக்கிழமை இந்திய எல்லைக்குள் சீனா நாட்டவர் ஒருவரை எல்லை பாதுக்காப்பு படை கைது செய்தது. சந்தேகத்திற்கு இடமான வகையில் கைது செய்யப்பட்ட அவர் ஹான் ஜுன்வே என அடையாளம் காணப்பட்டார். அவரை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பல மணிநேர கடுமையான விசாரணைக்கு பின்னர், போலி ஆவணங்கள் மூலம் வாங்கிய 1300 க்கும் மேற்பட்ட இந்திய சிம்களை தனது உள்ளாடைகளில் மறைத்து கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.
கடத்தப்பட்ட சிம் பின்னர் சீனாவில் (China), இந்திய கணக்குகளை ஹேக் செய்வதற்கும் இந்தியாவில் பிற நிதி மோசடிகளை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
எல்லை பாதுகாப்பு படை (BSF) தென் வங்க எல்லை பகுதியான மால்டாவிலிருந்து ஒரு சீன நாட்டவரை கைது செய்த ஒரு நாள் கழித்து, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALSO READ | கொரோனா வைரஸ்; சீனாவிற்கு எதிராக சிக்கிய ஆதாரம்; மர்ம திரை விலகுமா
தென் வங்க எல்லையில் உள்ள எல்லை காவல் படையினரின் அறிக்கையில், “ஹான் ஜுன்வே ஒரு தேடபப்ட்டு வந்த குற்றவாளி, முழுமையான விசாரணையில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளி வந்துள்ளன. அவர் இதுவரை இந்தியாவில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 1300 இந்திய சிம்களை சீனாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ஜுன்வே மற்றும் அவரது கூட்டாளிகள், சிம்களை உள்ளாடைகளில் மறைத்து சீனாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிம்கள் கணக்குகளை ஹேக் செய்வதற்கும் பல வகையான நிதி மோசடிகளை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன. சிம் பயன்படுத்தி ஹாக்கிங் செய்து பண மோசடியின் மூலம் மக்களை ஏமாற்றுவதே அவர்களின் நோக்கம். ” என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
இது தவிர, அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. "ஹான் ஜுன்வேயின் வணிக கூட்டாளியான சன் ஜியாங் பல குற்றச்சாட்டுக்களில் லக்னோவின் பயங்கரவாத எதிர்பு குழுவினால், கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்து, ஹான் ஜுன்வேக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. ” என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது
ALSO READ | சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை: நடந்தது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR