Indigo Flights Ticket Refund: இண்டிகோ நிறுவனம் கடந்த சில நாள்களாக எக்கச்சக்கமான தனது விமான சேவைகளை ரத்து செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணைத்தை திருப்பிச் செலுத்துமாறு (Refund) விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாளை (டிசம்பர் 7) இரவு 8 மணிக்குள் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தொகையை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளது.
Indigo Flights Ticket Refund: மறு பயணத்திட்ட கட்டணம் வசூலிக்க வேண்டாம்
விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "(விமானங்கள்) ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த மறு பயணத்திட்ட கட்டணங்களையும் விதிக்க வேண்டாம்" என்றும் இண்டிகோவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, விமானம் ரத்து செய்யப்பட்டு, அந்த பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்வதற்கு தனிக் கட்டணம் விதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த அசாதாரண சூழலில், பயணிகள் நலன் கருதி மத்திய அரசு இந்த அறிவுரையை வழங்கி உள்ளது. பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் அல்லது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் இண்டிகோவை எச்சரித்திருக்கிறது.
Indigo Flights Ticket Refund: இன்று 400+ விமானங்கள் ரத்து
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நேற்று (டிசம்பர் 5) மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. இன்றும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பெரிய சிக்கல்களை எதிர்கொண்டது. பயணிகள் ஆதரவுக்காகவும், பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் வசதி மையங்களை அமைக்கவும் இண்டிகோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட பயணிகளை முன்கூட்டியே தொடர்பு கொண்டு பணத்தைத் திருப்பிச் செலத்தும் செயல்முறையில் பணியாற்றும். இல்லையெனில், மாற்று பயண திட்டத்தை வகுக்கவும் இந்த மையங்கள் உதவி செய்யும். தானியங்கி முறையில் பணத்தை திருப்பிச் செலுத்தும் முறை, நிலைமை சீரடையும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indigo Flights Ticket Refund: லக்கேஜ் குறித்தும் அறிவுரை
விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தாமதமானாலோ, பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட எந்தவொரு லக்கேஜ்ஜையும் 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது. பணத்தை திருப்பிச் செலுத்தம் செயல்பாட்டை கண்காணிப்பது குறித்தும், அதை விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்தும் பயணிகளுடன் தெளிவான தகவல்தொடர்பைப் பராமரிக்கவும் இண்டிகோவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயணிகள் உரிமைகள் விதிமுறைகளின் கீழ் தேவைப்படும் இடங்களில் இழப்பீடு வழங்கவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இண்டிகோ விமானங்கள் ரத்து. பயணிகள் அவதி.. சிறப்பு ரயிகள் அறிவித்த தெற்கு ரயில்வே!
மேலும் படிக்க | ரூ.7,000 டிக்கெட் ரூ.40 ஆயிரமா? மனசாட்சி இல்லையா? Indigo சர்ச்சை என்ன?
மேலும் படிக்க | தொடரும் சிக்கல்... கொத்து கொத்தா விமானங்கள் ரத்து! இண்டிகோ சேவை எப்போது சீராகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









