)
Cloudburst In Doda: ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேக வெடிப்பு பேரழிவை ஏற்படுத்தியது. பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதியில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோடாவில் உள்ள செனாப் நதி அதிக அளவில் தண்ணீர் பாய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேக வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது, வைஷ்ணோதேவி யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன. தாவி, பியாஸ், உஜ் மற்றும் ரவி ஆறுகள் இயல்பை விட அதிகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவசரகால தொடர்பு எண்கள்: 0191-2525542 மற்றும் 0191-2571616 உடனடி உதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் மலையேற்றத்தைத் தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தனது X தளத்தில், "ஜம்மு மாகாணத்தின் பல பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நிலைமையைக் கண்காணிக்க ஸ்ரீநகரில் இருந்து அடுத்த விமானத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஜம்முவுக்குச் செல்வேன். இதற்கிடையில், அவசரகால மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பிற தேவைகளுக்காக துணை ஆணையர்களுக்கு கூடுதல் நிதி வழங்க அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
The situation is many parts of Jammu province is quite serious. I’ll be taking the next available flight from Srinagar to Jammu to personally monitor the developing situation. In the mean time instructions have been issued to place additional funds at the disposal of the DCs to… https://t.co/vOfGXAEb8e
— Omar Abdullah (@OmarAbdullah) August 26, 2025
எஸ்டிஎம் அருண் குமார் பத்யா கூருஜ்கஈய்ல், கடந்த 72 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சம்பவத்திற்கு முன்பு தெரிவித்திருந்தார். சுமார் 4-5 வீடுகள் கீழே விழும் நிலையில் ஆபத்தில் உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களை அருகிலுள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றான், முதலில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதே எங்கள் முன்னுரிம எனக் கூறியுள்ளார்.
துணை ஆணையர் ஹர்விந்தர் சிங் ANI ஊடகத்திடம் பேசுகையில், "மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக செனாப் நதிப் பகுதிகளில். இரண்டு இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேக வெடிப்பு காரணமாக NH 244 முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க எங்கள் குழு செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவர் காந்தோரிலும் ஒருவர் தாத்ரி துணைப்பிரிவிலும் உள்ளனர்.
15 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மாட்டுத் தொழுவங்களும் சேதமடைந்துள்ளன. ஒரு தனியார் சுகாதார மையமும் சேதமடைந்துள்ளது. மூன்று கால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. செனாப் நதியைச் சுற்றியுள்ள மற்றும் செனாப் நதியை ஒட்டிய சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.
#WATCH | Doda, J&K: On incessant rainfall in the sub-division Gandoh Shukra, SDM Arun Kumar Badya says, "Some houses have developed cracks because of continuous rainfall for the last 72 hours. Around 4-5 houses are in imminent danger. They are not suitable for accommodation... We… pic.twitter.com/wSZ5omSrAz
— ANI (@ANI) August 26, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ