பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் துபாயில் மேடையில் நிகழ்ச்சியில் மரணம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு துபாயில் மேடையில் நிகழ்ச்சியில் பரிதாபமாக மரணம்!!

Updated: Jul 21, 2019, 02:33 PM IST
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் துபாயில் மேடையில் நிகழ்ச்சியில் மரணம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு துபாயில் மேடையில் நிகழ்ச்சியில் பரிதாபமாக மரணம்!!

துபாய்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 36 வயதுடைய மஞ்சுநாத் நாயுடு என்ற இளைஞர் துபாயில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்துள்ளார். இவரை அவரது ரசிகர்கள் ‘மேங்கோ’ என அன்புடன் அழைபார்கள். ஏனென்றால், அவர் அவ்வளவு பிரபலம். 

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த கமெடி கலைஞர்களுக்கான நகைச்சுவை நிகழ்ச்சியில் மஞ்சுநாத் கலந்து கொண்டுள்ளார். அப்போது, மேடையில் பெர்பார்மன்ஸ் செய்த அவர், மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார். தொடர்ந்து ‘கவலையால் ஏற்படும் மனஅழுத்தம்’ பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசிய அவர், திடீரென மேடையிலிருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி கீழே விழுந்தார். 

இதனை பார்த்த பார்வையாளர்கள், இது நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்தனர். ஆனால், வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் அவரது நண்பர் ஒருவர் மஞ்சுநாத்தை எழுப்பியுள்ளார். ஆனால் அவள் எழுந்திரிக்கவே இல்லை. இதையடுத்து, மருத்துவரை சிகிச்சைக்கு அவரவளைத்துள்ளனர். ஆனால்,  அவர் முன்னரே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தனது உயிர் பிரியும் வேளையிலும் தனது கடமையை சரியாக செய்துள்ளதாக அவரது ரசிகர்கள் மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.