மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்வர்கள் நிர்வாணமாக அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்!
கடந்த 10-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.
நிர்வாணமாக வைத்து தாக்கியது மட்டுமின்றி அந்த சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அப்பகுதி மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் வீடியோவாக பதிபாகி வைரலாக பரவி வருகின்றது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சமூக நீதி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இதை கண்டித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் கூறியுள்ளதாவது..! இந்த தலித் சிறுவர்கள் செய்த குற்றம் அவர்கள், உயர் ஜாதியினர் கிணற்றில் குளித்தது தான்.
மனுவாதி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் விஷமத்தனமான அரசியலுக்கு எதிராக நாம் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
महाराष्ट्र के इन दलित बच्चों का अपराध सिर्फ इतना था कि ये एक "सवर्ण" कुएं में नहा रहे थे।
आज मानवता भी आखरी तिनकों के सहारे अपनी अस्मिता बचाने का प्रयास कर रही है।
RSS/BJP की मनुवाद की नफरत की जहरीली राजनीति खिलाफ हमने अगर आवाज़ नहीं उठाई तो इतिहास हमें कभी माफ नहीं करेगा pic.twitter.com/STeBSkI1q1
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2018