ராகுல் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம்!!
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், திருநாவுக்கரசர் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இன்று ராகுல்காந்தி தாக்கப்பட்டத்தை கண்டித்தும், பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் சமரசம் ஏற்படாததால், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர் போலீசார்.
அதேபோல, ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சண்டிகரிலும் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்திலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.