)
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில், பதிவிட்டுள்ள ஒரு விஷயம் தான் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தவறாமல் உயர்ந்து வரும் வேளையில், மற்றொரு உலோகத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனில் அகர்வால் காப்பர் உலோகத்தைத் தான் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு பேசி உள்ளார். தங்கமாகவே இருந்தாலும் சரி சந்தையில் அதற்கு டிமாண்ட் இருந்தால் மட்டுமே அதன் விலை உயரும். இப்படி இருக்கையில் காப்பர் உலோகம் உலகில் கிளீன் எனர்ஜி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் காரணத்தால் இதற்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது. எனவே தாமிரமே அடுத்த தங்கம் என்று அனில் அகர்வால் குறிப்பிட்டார்.
கனடாவைச் சேர்ந்த பாரிக் கோல்ட் நிறுவனத்தின் வியூகம் மாற்றியுள்ளது மூலம், பாரிக் கோல்ட் என்ற தனது நிறுவனத்தின் பெயரை சுருக்கி வெறுமனே "பாரிக்" என்று மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் தாமிர சுரங்க பணிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தான் பெயர் மாற்றம் நடந்துள்ளது என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். தாமிரம் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்து அதிநவீன தொழில்நுட்பங்களிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது எனவும் அனில் அகர்வால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
காப்பர் உலோகத்திற்கு அதிகரித்து வரும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக, உலகெங்கிலும் உள்ள தாமிர சுரங்கங்கள் குத்தகைக்கு எடுக்கப்படும், வெட்டி எடுக்கும் பணிகளை வேகப்படுத்த புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும், சுத்திகரிப்பு பணிகளை புதுப்பிக்கப்பட்டு வருவதையும், புதிய உருக்காலைகள் கட்டப்பட்டு வருவதையும் அனில் அகர்வால் தனது பதிவில் குறிப்பிட்டார். காப்பர் உலோகத்திற்கு வளர்ந்து வரும் தேவையை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், கணிசமான பலன்களைப் பெற முடியும் என்றும் அனில் அகர்வால் தெரிவித்தார். இளம் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. இதை ஒரு தேசிய இலட்சியமாக மாற்றுவோம் என்றும் தனது பதிவில் அனில் அகர்வால் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ