கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற நோய் தொற்று இந்தியா உட்பட உலகையே அச்சுறுத்தியது. அதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா நோய் தொற்று பரவி பல லட்ச மக்களின் உயிரை பறித்தது. பின்னர் தடுப்பூசி சொலுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. 2022 இறுதிக்கு பிறகு கொரோனா தொற்று குறித்து எந்த செய்தியும் இல்லை. உலக நாடுகள் பழைய நிலைக்கு திரும்பின. மக்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா குறித்த செய்திகள் வர தொடங்கி உள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற இடங்களில் மக்கள் பாதிக்கப்பட தொடங்கி உள்ளனர். இந்தியாவிலும் பரவ தொடங்கியதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 1ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக கோட்டம் மாவட்டட்ஹ்தில் 57 பேரும் எர்ணாகுளத்தில் 34 பேரும் திருவனந்தபுரத்தில் 30 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், வரும் நாட்களில் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடபாக அமைச்சர் வீணா தெரிவித்திருப்பதாவது, இந்த தொற்று வேகமாக பரவி வந்தாலும், நோயின் தீவிரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அதேபோல் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
கேரள மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது என கூறினார்.
மேலும் படிங்க: 27 நக்சல்களை கொன்ற பாதுகாப்பு படையினர்... முக்கிய தலைவர் பசவராஜு பலி - யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ