கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல். இவர் பல ஆண்டுகளாக அம்மாநில அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி சந்தோஷ் பாட்டீல் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் மக்களுக்காக அரசு வழக்கும் திட்டங்களிலும், அதற்காக ஒதுக்கப்படும் நிதியிலும் ஊழல் செய்வதாக புகார் அளித்திருந்தார்.
அது மட்டும் இன்றி, பெலகாவியில் சாலை அமைக்கும் பணிக்காக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக குறிப்பிட்ட சந்தோஷ், அந்த தொகையை தராமல் கடந்த 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இந்த 4 கோடி ரூபாயில் 40 சதவீதம் கமிஷனாக தந்தால் மட்டுமே அந்த 4 கோடி ரூபாய் நிதியை வழங்குவதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மிரட்டியதாகவும் சந்தோஷ் கூறியிருந்தார்.
இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க சாலை அமைக்கும் பணிக்காக தான் வட்டிக்கு பணம் வாங்கி இருந்த நிலையில் அவர்கள் பணத்தை திரும்ப கேட்டு கழுதை நெரிப்பதாக வருத்தம் தெரிவித்திருந்த சந்தோஷ் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வராத நிலையில் தற்போது சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உடுப்பி மாவட்டத்தில் உள்ள சாபவி எனும் தனியார் விடுதி ஒன்றில் இறந்த கிடந்த அவரின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து பல்வேறு தடயங்களும், அவர் தனது நண்பருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியும் சிக்கியுள்ளது. அதில் என் மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டும்தான் காரணம் என கூறியுள்ளார்.
இந்திய அளவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த பிரச்சனை குறித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தோஷ் பாட்டீலுக்கு ஆதரவாக போர் கொடி உயர்த்தியுள்ளனர். குற்றவாளி அமைச்சராக இருந்தாலும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!
இதனையடுத்து, அமைச்சர் ஈஸ்வரப்பா மீது அம்மாநில காவல்துறை முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் இறுதியான முடிவு வரும் வரை ஈஸ்வரப்பா பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடகா மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் புகார் கூறிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR