)
Crime News In Tamil: கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் ஒரு பெண் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாத வகையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கில் இதுவரை மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு பெண்ணை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில் அதை தூர வீசியிருக்கின்றனர். சொந்த மருமகனே தனது மாமியாரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் உள்ள பெல்லாவி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி. 42 வயதான லட்சுமி தேவி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அதற்கு முந்தைய நாள் அவரது மகளை பார்க்க அவர் வீட்டில் இருந்து சென்றிருக்கிறார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை என லட்சுமி தேவியின் கணவர் பசவராஜ் பெல்லாவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சில நாள்களுக்கு பின், ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று சிம்புகனஹள்ளி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில பைகள் நிறைய கிடப்பதாக காவல்துறைக்கு பல்வேறு அழைப்புகள் வந்துள்ளனர். அவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அனைத்திலும் மனித உடல் பாகங்கள் இருந்துள்ளனர். மொத்தம் 19 பைகள், 19 வெவ்வேறு பகுதிகளில் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. தடயவியல் ஆய்வு குழுவினர் மற்றும் காவல் துறையினர் இதுகுறித்து இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல் மருத்துவர் ராமச்சந்திரய்யா (47) என்பவர் சிக்கி உள்ளார். இவர்தான் லட்சுமி தேவியின் மருமகனும் ஆவார். தொடர்ந்து இந்த கொலையில் சதீஷ் (38), கிரண் (32) ஆகியோருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. இவர் அனைவரும் கல்லஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த குற்றம் குறித்து துமகுரு எஸ்பி கே.வி. அசோக் கூறுகையில், "ஒரு சிசிடிவி கேமராவில், மாருதி சுசுகி Breeza கார் ஒன்று சிக்கியது, அதில்தான் உடற்பாகங்களை வீசியிருக்கின்றனர், அதுதான் முக்கிய துப்பாக அமைந்தது. அந்த கார் சதீஷ் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரை காவலில் எடுத்து விசாரித்ததும் உண்மையை ஒப்புக்கொண்டு, இதில் கிரண் மற்றும் பல் மருத்துவர் ராமச்சந்திரய்யா ஆகியோருக்கு தொடர்பிருப்பதையும் தெரிவித்தார்" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் மருத்துவர் ராமசந்திரய்யாவுக்கும், லட்சுமி தேவியின் மகள் தேஜஸ்விக்கும் திருமணம் நடந்துள்ளது. அப்போது இருந்து தனது திருமண வாழ்க்கையில் மாமியார் லட்சுமி தேவி பலமுறை தலையிட்டது அவருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. தனது மனைவியை முற்றிலும் மாற்றி வீட்டில் பிரச்னை கிளப்புவதே லட்சுமி தேவிதான் என்று ராமசந்திரய்யா தொடர்ந்து அதிருப்தியில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ராமசந்திரய்யாவின் விவகாரத்து வழக்கு இன்னும் விசாரணையில்தான் இருக்கிறது.
எதற்கு பல துண்டுகளாக வெட்டி, பல இடங்களில் பாகங்களை வீசினர் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும், சடங்கு அல்லது நரபலிக்காக இந்த கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ