)
7th Pay Commission, Dearness Allowance Hike: இன்னும் தீபாவளிக்கு சில் நாள்களே உள்ளன. வரும் அக். 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசு ஒன்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி (DR) 3% உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் 55% இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டது.
மேலும், இவை 2025 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால், இதற்கு முந்தைய மூன்று மாதங்களின் அரியர் தொகையும் அரசு ஊழியர்களுக்கு வந்து சேரும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியானது. அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசே அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை அதிகரித்து வழங்கிவிட்ட நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பீகார் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளி பரிசாக அகவிலைப்படியை உயர்த்தி நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்மூலம், பீகார் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 58 % ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, பீகார் அமைச்சரவையில் இன்னும் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பீகாரில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பீகார் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகின்றனர். இன்னும் சில நாள்களில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்பின் தேர்தல் விதி அமலுக்கு வரும் என்பதால் அதற்கு முன்பே பல திட்டங்களை செயல்படுத்த பீகார் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ