அப்பாவிகளை கொன்றவர்களையே தாக்கினோம்... ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங்!

Operation Sindoor: பகல்காமில் அப்பாவி இந்திய மக்களை கொலை செய்தவர்களையே ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்கினோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 7, 2025, 06:24 PM IST
  • பகல்காம் தாக்குதல் கடந்த ஏப். 22ஆம் தேதி நடத்தப்பட்டது.
  • இன்று நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த 15 நாள்களில் இந்தியா இதற்கு தயாராகி வந்தது.
அப்பாவிகளை கொன்றவர்களையே தாக்கினோம்... ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங்!

Operation Sindoor: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில்தான் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் துல்லியமாகவும், எச்சரிக்கையாகவும், உணர்திறனுடனும் தாக்குதல்கள்  நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh) தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

Operation Sindoor: அனுமனின் லட்சியத்தை போன்று...

ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் எல்லை சாலைகள் அமைப்பின் 50 உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார். அப்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை தாக்கிய வெற்றிகரமான நடவடிக்கைக்கு ஆயுதப்படைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ராஜநாத் சிங் பேசி உள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எல்லைத் தாண்டிய தொடர்புகள் இருந்தன என்றும் மேலும் கடந்த காலங்களில் இந்திய மண்ணில் நடந்த பல தாக்குதல்களைப் போலவே, பாகிஸ்தானின் பங்கு இதில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது என்றும் அவர் கூறினார். 

மேலும் அவர் பேசியதாவது, "இந்தியாவின் ஆயுதப் படைகள் வரலாறு படைத்துள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு ஆதரவளித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். ராமாயணத்தில் ராவணன் சீதையை சிறைப்பிடித்தபோது, அசோகவனத்தை அழித்த அனுமனின் லட்சியத்தைப் பின்பற்றி இந்தியாவின் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. என்னை அடித்தவர்களையே, நான் அடித்தேன். எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் கொன்றோம்" என்றார்.

Operation Sindoor: பிரமதர் மோடிக்கு நன்றி

மேலும் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்து வலுவான பதிலடி கொடுத்துள்ளன. மேலும் இந்த ஆபரேஷன் சிந்தூர் கவனமாகத் திட்டமிடப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் மன உறுதியைத் தகர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மட்டுமே தாக்கப்பட்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நான் சல்யூட் அடிக்கிறேன்" என்றார்.

Operation Sindoor: ஆப்ரேஷன் சிந்தூர் பின்னணி!

பகல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் அனைவருமே ஆண்கள்தான். அதாவது, மனைவிகள், மகன்கள், குடும்பத்தினர் முன்னிலையில் பகல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொலை செய்தனர். ஆண்களை கொன்று பெண்களின் குங்குமத்தை அழித்தனர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

அந்த வகையில், பகல்காமில் பெண்களுக்கும், அவர்களின் கணவர்களும் நேர்ந்த கொடூரத்திற்கு பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு "ஆப்ரேஷன் சிந்தூர்" என பெயர் வைத்துள்ளனர். சிந்தூர் என்றால் குங்குமம் என அர்த்தம். இந்த பெயரை பிரதமர் நரேந்திர மோடிதான் முன்மொழிந்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

அதுமட்டுமின்றி, ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன என்பதை விவரிக்க விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கப்பல் படையின் கர்னல் சோபியா குரேஷி ஆகிய இரு பெண் உயர் அதிகாரிகளே செய்தியாளர்களை சந்தித்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 

மேலும் படிக்க | Operation Sindoor: இந்தியா-பாகிஸ்தான் போர்..சீனாவின் நிலைபாடு என்ன?

மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: மனமுடைந்த முனீர்.. அதிர்ச்சியடைந்த ஷாபாஸ்.. மோசமான பாகிஸ்தானின் நிலை

மேலும் படிக்க | Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News