டெல்லி கார் குண்டுவெடிப்பு: காரில் மாஸ்க் அணிந்த நபர், சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்

Delhi Blast Latest Updates: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரின் கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை டெல்லி காவல்துறை பெற்றுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 11, 2025, 09:16 AM IST
  • டெல்லி கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதலா?
  • மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த கார்.
  • காரில் கருப்பு மாஸ்க் அணிந்த நபர்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு: காரில் மாஸ்க் அணிந்த நபர், சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்

Delhi Blast Latest Updates: திங்கள்கிழமை மாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.முக்கிய நகரங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் ஹை அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

நேற்று செங்கோட்டை அருகே ஏற்பட்ட அதிக தீவிரம் கொண்ட வெடி விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பலர் காயமடைந்தனர். சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னல் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மெதுவாகச் சென்ற வாகனம் சிக்னலில் நிறுத்தப்பட்டபோது வெடிப்பு ஏற்பட்டதாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார். ஹூண்டாய் i20 கார் வெடித்த நிலையில், அருகில் இருந்த கார்களிலும் தீ பரவியது.

கார் நுழைவதை காட்டும் சிசிடிவி காட்சிகள்

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரின் கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை டெல்லி காவல்துறை பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபர் அந்த நேரத்தில் தனியாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. டெல்லி போலீஸின் புலனாய்வு அதிகாரிகள் இப்போது தர்யாகஞ்ச் நோக்கிச் செல்லும் வழியின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் வாகனத்தின் முழு இயக்கத்தையும் கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கிளிப்களை ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள டோல் பிளாசாவில் இருந்து வரும் காட்சிகளும் அடங்கும்.

காரில் கருப்பு மாஸ்க் அணிந்த நபர்

குண்டுவெடிப்பு முந்தைய தருணங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரை இந்த காட்சிகள் காட்டுகின்றன. கார் பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் ஓடுவதையும் காட்சிகளில் காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு மாஸ்க் அணிந்த ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. கார் ஓட்டுநர் பயங்கரவாதி முகமது உமர் என்று தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த கார்

வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த கார் செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங் இடத்தில் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), வெடிபொருள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. கோட்வாலி காவல் நிலையம் UAPA மற்றும் வெடிபொருள் சட்டத்தின் 16 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் வழக்கை விசாரித்து வருகிறது.

ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு

ஃபரிதாபாத்தில் காஷ்மீரை சாந்த ஒரு மருத்துவரை போலீசார் கைது செய்து 2,900 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பழைய டெல்லியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கோயிலைச் சேர்ந்த முசாமில் கனாயி என்ற முசைப், அல் ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மருத்துவமனையையும் கொண்டுள்ளார். ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஒய்ட் காலர் பயங்கரவாத மாட்யூல்

டெல்லியில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள தௌஜில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனமாகும். ஃபரிதாபாத்தில் மொத்தம், மூன்று மருத்துவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைதுகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதலுக்கு பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் மற்றும் காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒய்ட் காலர் பயங்கரவாத மாட்யூலை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதலா?

சில முக்கிய அம்சங்கள் இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதை காடுகின்றன:

- வெடிப்பின் தீவிரம் மற்றும் இடிபாடுகளின் தன்மை, இது சாதாரண எரிபொருள் கசிவால் ஏற்பட்ட வெடிப்பு அல்ல எனதையும், RDX போன்ற அதிக தீவிரம் கொண்ட வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதையும் குறிக்கிறது. இருப்பினும், குண்டுவெடிப்பின் சரியான தன்மை ஆராயப்பட்டு வருகிறது. மேலும் வெடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இன்னும் வரவில்லை.

- வெடிப்பின் தீவிரம் மிகவும் வலுவாக இருந்ததால், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ITO வரை சத்தம் கேட்டது.

- வெடிப்பு நிகழ்ந்த ஹரியானா உரிமத் தகடு கொண்ட i20 கார் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது.

- குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில் கார் பாகங்கள் சிதறிக்கிடந்தன.

= செங்கோட்டைக்கு முன்னால் உள்ள சாந்தினி சௌக் நோக்கிய பல கடைகளின் ஜன்னல்கள் உடைந்தன.

மேலும் படிக்க | டெல்லி கார் குண்டுவெடிப்பு: கார் ஓனர் கைது? சிக்கும் மருத்துவர்கள் - முழுமையான தகவல்கள்

மேலும் படிக்க | டெல்லி குண்டுவெடிப்பு : 8 பேர் பலி, 3 பேர் படுகாயம்! உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News