Delhi Car Blast News Updates: டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (நவ. 10) இரவு வெள்ளை நிற ஹூண்டாய் i20 மாடல் கார் வெடித்து சிதறியதில் சுமார் 9 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இந்த சம்பவம் நடந்ததால், நாடு முழுவதும் பெரும் பதற்றம் உருவானது.
Delhi Car Blast: தற்கொலை படை தாக்குதல் இல்லை
டெல்லி செங்கோட்டை கேட் நம்பர் 1 மெட்ரோ அருகே இந்த கார் வெடிப்பு சம்பவம் கழ்ந்திருக்கிறது. ஹூண்டாய் i20 கார் மெதுவாக அங்கிருந்த போக்குவரத்து சிக்னலில் வந்து நின்று உடன், திடீரென வெடித்துச் சிதறியது. மேலும், அருகில் இருந்த வாகனங்களிலும் தீப் பற்றிக் கொண்டதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகின. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மருத்துவர் உமர் நபி என்பவரே அந்த காரை இயக்கி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
VIDEO | CCTV footage captures the exact moment of the blast near Delhi's Red Fort.
A blast took place in a slow-moving car at a traffic signal near the Red Fort metro station on Monday evening, killing 12 people, injuring many and gutting several vehicles.
(Source: Third Party)… pic.twitter.com/xjpScNpJ5Y
— Press Trust of India (@PTI_News) November 12, 2025
மேலும், டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த அன்று காலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ கெமிக்கல் கைப்பற்றப்பட்டது. இது உமர் நபிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதனால், வேறு இடங்களை திட்டங்களை மாற்ற உமர் நபி முயற்சித்தபோது கார் வெடிப்பு சம்பவம் எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும் உளவுத்துறை தரப்பில் வெளியாகி உள்ள தகவல்கள் கூறுகின்றன. இது தற்கொலைப் படை தாக்குதல் இல்லை என்றும் விபத்தாக நடந்த வெடிப்பு சம்பவம்தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Delhi Car Blast: அரைகுறையாக அமைக்கப்பட்ட வெடிகுண்டு
உளவுத்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உமர் நபி IED வெடிகுண்டை அரைகுறையாக அமைத்திருக்கிறார் என்றும் அதனாலேயே அந்த வெடிகுண்டு வெடித்தும் பெரியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் வெளிநாட்டவர்களின் தலையீடு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Delhi Car Blast: அனைவருமே மருத்துவர்கள்
இதுவரை இச்சம்பவம் தொடர்பாக முஸம்மில் ஷகீல், அடீல் அஹ்மத் ராதர் மற்றும் ஷஹீன் சயீத் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷஹீன் பெண் மருத்துவர் ஆவார். டெல்லியில் வெடித்த காரை ஒட்டிய உமர் நபியும் மருத்துவர் ஆவர். இவர்கள் அனைவருமே அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi Car Blast: குடியரசு தினத்தில் பெரிய திட்டமா?
கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷகீல் என்பவரின் மொபைலில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் இவரும், உயிரிழந்த உமர் நபியும் பல முறை செங்கோட்டை பக்கம் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், குண்டுவெடிப்பை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. முஸம்மில் ஷகீலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையின் பிரதமர் உரையாற்றும்போதும் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, கடந்த தீபாவளி தினத்தன்றே அவர்கள் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அத்திட்டத்தை கைவிட்டதாகவும் முஸம்மில் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









