டெல்லியில் நாளை மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் ஒரு சில பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Updated: Mar 24, 2019, 10:34 AM IST
டெல்லியில் நாளை மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் ஒரு சில பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே நாட்டின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரியை விட 37 சதவீதம் கூடுதலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.