)
Man Shot Woman Who Filed Sexual Assault Compliant : நாளுக்கு நாள், பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்த பாலியல் குற்றங்களை, காவல்துறையிடம் தெரிவித்தால் அதற்கென்று தனியாக சில பிரச்சனைகள் எழுகின்றன. இதனாலேயே, பாலியல் ரீதியாக துன்புருத்தப்படுபவர்கள் பலர், இது குறித்து பேசுவதற்கே பயப்படுகின்றனர். இங்கு ஒரு பெண், தனது பாலியல் குற்றவாளியாளேயே மீண்டும் சுடப்பட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல்…
பாலியல் குற்றவாளி:
டெல்லியில் இருக்கும் ஒரு சலூனில், பெண் ஒருவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆண்டு தன்னை ஒருவர் கற்பழித்ததாக கூறி வசந்த் விஹார் என்பவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
இதனால் கோபமான அந்த பாலியல் குற்றவாளி, இந்த பெண் வேலையை முடித்து விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போகும் போது வழியில் இன்னொருவருடன் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறியிருக்கிறார். அத்துடன் துப்பாக்கியாலும் சுட்டிருக்கிறார்.
சுட்ட அந்த நபரின் பெயர், அபுசாயிர் சஃபி. இவர், அந்த பெண் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் கடந்த ஆண்டு கைது செய்யபப்ட்டிருக்கிறார். இதையடுத்து, கடந்த மாதம் இடைகால ஜாமினில் வெளியில் வந்திருக்கிறார்.
மீண்டும் கைது:
குற்றவாளி சஃபி, ஒரு ஸ்பாவில் வேலை செய்து வருகிறார். இவர், சுடுவதற்கு முன்பு அந்த பெண்ணின் 2-3 நாட்கள் நடமாட்டத்தை கண்காணித்திருக்கிறார். சஃபி, அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று அமன் சுக்லா என்பவருடன் சேர்ந்து இந்த பெண்ணை சுட்டிருக்கிறார்.
போலீசார் விசாரணை:
இந்த சம்பவமானது, ஜூலை 30ஆம் தேதி இரவு 9.49 மணியளவில் நடந்துள்ளது. சம்பவத்திற்கு பின்பு, ஆட்டோ ஓட்டுனர் அதிகாரிகளுக்கும் ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். இப்போது அந்த பெண், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் போலீஸார் கூறியிருக்கின்றனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளை வைத்து, போலீஸார் சஃபியையும் அவருடன் சேர்ந்து இந்த குற்றத்தை செய்தை அமனையும் தேடி வந்தனர். இதையடுத்து, அவர் சம்பவத்தின் போது பயன்படுத்திய பைக்கை வைத்து பிடிப்பட்டிருக்கின்றனர்.
முன்னர் நடந்த பாலியல் குற்றத்திற்கும் இப்போது அந்த நபர் புகார் கொடுத்த பெண்ணை சுட்டதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22