டெல்லி வானிலை: ஒருபக்கம் மோசமான காற்று.. மறுபுறம் கடுமையான குளிர்
Delhi Weather Latest News: பனிமூட்டம், குளிர் காற்று.. 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை காரணமாக டெல்லியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.
Delhi News in Tamil: டெல்லியில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அதிகரித்து வந்த வெப்பநிலை நேற்றுடன் குறையத் தொடங்கியது. இதுக்குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்பநிலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அடர்ந்த பனிமூட்டம் இருக்கும். எனவே இந்த இரண்டு நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி வட மாநிலங்களில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) டெல்லி முழுவதும் காலை புகை மூட்டம் மற்றும் மிதமான மூடுபனிக்கு வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்திலும் இதே நிலைதான் இருக்கும் ர்ணவும் கூறியுள்ளது.
அதேநேரம் பகலில் வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகக் குறையலாம்.
நேற்று (திங்கள்கிழமை) காலை டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் லேசான பனி அல்லது பனிமூட்டம் காணப்பட்டது. இருப்பினும், நேரம் ஆக ஆக செல்லச் லேசான சூரிய ஒளி வெளிப்பட்டது. ஆனால் தொடர்ந்து புகை மூட்டம் இருந்தது. வடமேற்கு காற்று காரணமாக குளிர் அதிகரித்து வெப்பம் குறைந்துள்ளது.
நேற்று (திங்கள்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 25.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது இயல்பை விட ஒரு டிகிரி குறைவாகும். டெல்லி பாலம் பகுதியில் மிகக் குறைந்த அளவாக 24.6 டிகிரியாக இருந்தது. அதேசமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட மூன்று டிகிரி அதிகமாகும். டெல்லி காற்றில் ஈரப்பதம் அளவு 89 முதல் 51 சதவீதம் வரை இருந்தது.
அடுத்த மூன்று முதல் ஆறு நாட்களுக்கு காற்றின் தரம் "மிகவும் மோசமானது" முதல் "கடுமையானது" வரை இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தேசிய காற்றுத் தரக் குறியீடு தரவுகளின்படி நேற்று (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு டெல்லியின் AQI 218 ஆக பதிவு செய்யப்பட்டது. ஆனால் காற்றின் வேகம் குறைந்ததால் மாலை ஏழு மணிக்கு 377 ஆக அதிகரித்தது.
மேலும் படிக்க - மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் யார்? ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள் ஃபார்முலா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ