செலவுக்கு பயந்து மனைவியை கொன்று-தானும் உயிரிழந்த கணவன்! கடிதத்தில் இருந்த அதிர்ச்சி காரணம்..

Delhi Realtor Kills Wife And Shoots Himself : ஒருவர், தனது மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 18, 2025, 06:53 PM IST
  • மனைவியை கொன்ற கணவர்..
  • தானும் சுட்டு உயிரிழந்தார்..
  • கடிதத்தில் இருந்த காரணம்..
செலவுக்கு பயந்து மனைவியை கொன்று-தானும் உயிரிழந்த கணவன்! கடிதத்தில் இருந்த அதிர்ச்சி காரணம்..

Delhi Realtor Kills Wife And Shoots Himself : மனைவியை கணவன் கொல்வதும், மனைவி கணவனை கொல்வதும் தினசரி செய்தி ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில், குடும்பத்தினராக இருக்கின்றனர் என்றால், தங்களுடன் இருக்கும் குழந்தையையும் வேறு கொன்று விடுகின்றனர். அதிலும், உத்திர பிரதேசத்தில் “இப்படியும் நடக்குமா?” என நம்மையே கேட்க வைக்கும் அளவிற்கான வினோதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு ஒரு நிகழ்வும் அப்படி நடந்தேறியிருக்கிறது. ஆனால், இது டெல்லியில் நடந்துள்ளது ஒருவர், தனது மனைவியை காென்று விட்டு, தானும் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

மனைவியை கொன்ற கணவர்!

டெல்லியில் உள்ள கசிதாபாத் என்னும் இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 46 வயதான குல்திப் தியாகி என்பவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இவரது மனைவியின் பெயர் அனுஷா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த சம்பவமானது டெல்லியில் இருக்கும் ராதா குஞ்ச் எனும் நகரில், இரவு 11 மணியளவில் நிகழ்ந்திருக்கிறது. இந்த சம்பவம் நடக்கும்போது அவர்களின் மகன்கள் வீட்டில் தான் இருந்திருக்கின்றனர். சத்தம் கேட்ட பின்பு உடனடியாக தங்களின் பெற்றோர்கள் அறைக்கு சென்று என்ன நடந்தது என்று பார்த்த போது, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். 

குல்தீப்பின் உடல் தரையில் கிடந்துள்ளது. அனுஷாவின் உடல் மெத்தையில் இருந்துள்ளது. இவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் உடனே மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருக்கின்றனர். ஆனால் அங்கு இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த குல்தீப்பிற்கு, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சனை வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் உண்மை காத்திருந்தது.

சிக்கிய கடிதம்..

குல்தீப், தன்னை மனைவியை சுட்டு விட்டு தானும் உயிரிழப்பதற்கும் முன்பு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் பின்வருமாறு கூறி இருக்கிறார்: 

“நான் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனது குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரியாது. எனது மருத்துவ செலவுக்காக என் குடும்பம் எந்த பணத்தையும் செலவு செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அப்படியே செலவு செய்து ட்ரீட்மென்ட் எடுத்தாலும், நான் உரியிருடன் இருப்பேனா என்பது தெரியாது. நானும் எனது மனைவியும் சாகும் வரை ஒன்றாக இருப்போம் என உறுதி எடுத்தோம். அதனால் நான் அவளை என்னுடன் அழைத்து செல்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. இதற்கு குறிப்பாக எனது பிள்ளைகளோ அல்லது வேறு யாரும் காரணம் கிடையாது.” என எழுதி இருக்கிறார். 

குல்தீப், பயன்படுத்தியது லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனை போலீசார் கைப்பற்றி ஆதாரங்களில் ஒன்றாக சேர்த்து இருக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த போலீசார், அனுஷா தன்னை சுடுவதற்கு ஒப்புக்கொண்ட பின்பு தான் இவர் சுட்டாரா அல்லது அது அவரின் அனுமதியின்றி சுடப்பட்டாரா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | குழந்தை பெறுவதற்கு 1 நாள் முன்பு மனைவியை கொன்ற கணவன்! காரணம் என்ன? அதிர்ச்சி பின்னணி..

மேலும் படிக்க | காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் யூடியூபர்! வெளியான சிசிடிவி காட்சிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News