டெல்லி குண்டுவெடிப்பு : 8 பேர் பலி, 3 பேர் படுகாயம்! உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு?

Delhi Bomb Blast Death Toll : டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2025, 08:20 PM IST
  • டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு!
  • 8 பேர் பலி - 3 பேர் படுகாயம்..
  • உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு..
டெல்லி குண்டுவெடிப்பு : 8 பேர் பலி, 3 பேர் படுகாயம்! உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு?

Delhi Bomb Blast Death Toll : டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரம்.

Add Zee News as a Preferred Source

8 பேர் பலி-3 பேர் படுகாயம்:

டெல்லி செங்கோட்டை மெட்ரோ கேட் 1-ல் இன்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. பீகார் தேர்தல் நடந்து வரும் இந்த சமயத்தில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பாதிப்படைந்த 15 பேரை பேர் லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் எடுத்து வரும் போதே 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் நிலையாக உள்ளார். இந்த தகவலை, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு!

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், ஊடகத்திடம் பேசுகையில், 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றனர். Zomato ஊழியர் ஒருவர், தன் பைக்குடன் எறிந்ததை நேரில் கண்டதாகவும் கூறியிருக்கின்றனர். இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலர்டில் முக்கிய நகரங்கள்!

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பதை தொடர்ந்து, டெல்லியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கப்பட்டு வருகிறது. தற்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள பகுதிகளில் தீயணைப்பு துறையினர், மீட்புக்குழுவினர், காவல் துறையினர் என பலரும் குவிந்துள்ளனர். இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தொடர்ந்து ஊடகத்திடம் கூறியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியுற செய்பவையாக இருக்கின்றன. டெல்லியில் இருந்து வரும் வீடியோ காட்சிகளும் மனதிற்கு சங்கடத்தை தரும் வகையில் உள்ளன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News