)
Delhi Restaurant Fire Accident : டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெற்கு டெல்லியின் ஹவுஸ் பகுதியில் இயங்கும் ராணி லெமன் கிரீன் ரெஸ்டாரண்ட் என்ற 5 அடுக்குகள் கொண்ட உணவகத்தின் அடித்தளத்தில் இன்று காலை 8.50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்தே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 40 பேருக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹோட்டலில் இருந்து அழைப்பு வந்ததை தொடர்ந்து, இரண்டு தண்ணீர் வாகனங்கள், இரண்டு தண்ணீர் டேங்கர்கள், ஒரு விரைவு மீட்பு வாகனம் மற்றும் பிற தீயணைப்புப் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவரவில்லை. தீயில் இருந்து தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள கட்டடத்தில் இருந்து கீழே குதிப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
தீ விபத்து ஏற்பட்ட ஹோட்டலில் உணவு மட்டுமின்றி தங்கும் விடுதியும் செயல்படுகிறது. அங்கு வாடிக்கையாளர்கள் தங்குவதற்கு 25 ரூம்கள் உள்ளன. இதன்மூலம், 40 பேர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டவர்களே அங்கு பெரும்பான்மையாக தங்கி வந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது பலரும் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
#WATCH | Delhi | Death toll rises to 10 in Malviya Nagar restaurant fire incident, say Delhi Police.
— ANI (@ANI) June 3, 2026
Visuals from the site pic.twitter.com/sfrzsMzJIm
ஹோட்டலின் உணவகத்தில் தலைமை சமையல்காரராக இருப்பவர் கேசர் சிங். அவர்தான் காலை சுமார் 8 மணயளவில் அவர் ஒரு மின்சார அடுப்பை இயக்க முயன்றபோது, திடீரென தீப்பிழம்புகள் பற்றி எரிந்ததாக அவர் கூறினார். அது உடனடியாக ஹோட்டல் முழுவதும் தீ பரவியிருந்ததை அவர் உணர்ந்தார்.
ஹோட்டலில் தீப்பிடித்துவிட்டது என உடனடியாக அவரது உதவியாளரை எச்சரித்ததாக அவரே கூறினார். வெளியே வந்தபோது, ஹோட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்ததாகவும், எப்படியோ தப்பித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
The loss of lives due to a fire incident in Malviya Nagar, Delhi is tragic. My condolences to those who have lost their loved ones. Wishing a speedy recovery to the injured. Authorities are providing all possible assistance to those affected.
— PMO India (@PMOIndia) June 3, 2026
An ex-gratia of Rs. 2 lakh from…
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.