PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' -இந்திய அரசு.
)
USA Fighter Jets Use Indian Airspace? ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? ஈரான் மீதான தாக்குதலில் மோடி அரசு உடந்தையாக இருந்ததா? அமெரிக்க குண்டுவீச்சு பிளான் இந்திய வான்வெளி மூலம் ஈரானை அடைந்தன? என சமூக ஊடகங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவேளை ஈரான் மீதான தாக்குதல்களில் இந்தியா ஈடுபட்டிருந்தால், ஒரு பெரிய உலகளாவிய நெருக்கடி எழுந்திருக்கும். ஆனால் இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் பெரும் புயலைக் கிளப்புவதற்கு முன்பு, இந்திய அரசாங்கத்தின் பிரஸ் இன்ஃபோடெக் பீரோ (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு குழு இதனை 'போலியானது' 'வெறும் வதந்தி' என்று தனது எக்ஸ் (X) தள ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா?
முதலில் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி பார்ப்போம். சஹார் எமாமி என்ற பயனர் சமூக ஊடகங்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை தாக்க இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக எழுதினார். புது தில்லியின் மௌன உடந்தையாக இருப்பது இப்போது வரலாற்றின் தவறான பக்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஈரான் இதை ஒருபோதும் மறக்காது எனப் பதிட்டு இருந்தார். மேலும் தனது மற்றொரு பதிவில், "ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன" எனக் கூறியிருந்தார். அவரின் பதிவுக்கு பலர் இது போலியானவை, தவறான கருத்து எனவும் எதிர்கருத்து தெரிவித்திருந்தனர்.
CONFIRMED: Indian airspace was used by U.S. forces to strike Iran.
— Sahar Emami (@iamSaharEmami) June 22, 2025
New Delhi’s quiet complicity now places it on the wrong side of history.
Iran will not forget. pic.twitter.com/cuuIeKKjXw
BREAKING: Pakistani media confirm that the U.S. used Indian airspace to carry out attacks on Iran. pic.twitter.com/TxSGjITqV0
— Sahar Emami (@iamSaharEmami) June 22, 2025
போலியானது -PIB Fact Check
ஆனாலும் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, பின்னர் ஜூன் 22 அன்று இரவு 8:56 மணிக்கு, PIB ஊடகம் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை போட்டது. அதில், "பல சமூக ஊடக கணக்குகள் ஆபரேஷன் மிட்நைட் ஹேமரின் போது, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விமானங்களை ஏவ இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறி தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கூற்று போலியானது. இது ஆபரேஷன் மிட்நைட் ஹேமரின் போது செய்யப்படவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவின் கூட்டுப் பணியாளர்களின் தலைவரான ஜெனரல் டான் கேன், அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தும் பாதை குறித்து கூறியதாக PIB விளக்கம் அளித்துள்ளது.
Several social media accounts have claimed that Indian Airspace was used by the United States to launch aircrafts against Iran during Operation #MidnightHammer #PIBFactCheck
PIB Fact Check (@PIBFactCheck) June 22, 2025
This claim is FAKE
Indian Airspace was NOT used by the United States during Operation… pic.twitter.com/x28NSkUzEh
இந்திய அரசு மறுப்பு
மொத்தத்தில் ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' என்று இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்
ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஈரானின் மூன்று முக்கிய அணு ஆயுதத் தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பெயர் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' (Operation Midnight Hammer).
எந்த அமெரிக்க விமானமும் இந்திய வான்வெளியில் நுழையவில்லை
ஜூன் 22 அன்று மாலை, ஜெனரல் டான் கேன் வெள்ளை மாளிகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்பொழுது ஈரான் மீதான் தாக்குதல் நடவடிக்கை பாதையை பகிர்ந்து கொண்டார். அதன்மூலம் எந்த அமெரிக்க விமானமும் இந்திய வான்வெளியில் நுழையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டன.
ஜெனரல் கேன் கூற்றுப்படி, நடவடிக்கையின் கீழ் வெறும் 25 நிமிடங்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டன. 300 பவுண்டுகள் எடையுள்ள பங்கர் பஸ்டர் குண்டுகள், அதாவது சுமார் 13,68 கிலோ ஃபோர்டோ மற்றும் நடாஸ் அணுசக்தி தளங்கள் மீது வீசப்பட்டன. அதே நேரத்தில், இந்த வாகனம் டோமாக் குரூஸ் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. 125 க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் ஏழு ஸ்டெல்த் பி-2 குண்டுவீச்சு விமானங்களும் இதில் ஈடுபட்டன.
அமெரிக்காவை கண்டிக்கும் உலக நாடுகள்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு, பல நாடுகள் இதைக் கண்டிக்கின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. UNSC-ல், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிந்துள்ளன.
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு
ரேட்டர் செய்தி ஊடகத்தின் அறிக்கையின்படி, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஜூன் 23 திங்கட்கிழமை மாலைக்குள் தங்கள் எதிர்வினைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு UNSC-ன் மற்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு குறைந்தது ஒன்பது வாக்குகள் தேவை. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா அல்லது சீனா நாடுகள் அவர்களின் வீட்டோ அதிகாரத்தை பய்ன்படுத்தக் க்கூடாது என்பதும் மிக முக்கியமானது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ