Bullet Train Latest News Updates: இந்தியாவின் ரயில்வே துறை கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ரயிலில் பயணிக்கும் வகையில் எக்கச்சக்க வசதிகள், அதிவேக ரயில்கள் கொண்டுவரப்பட்டன. அந்த வகையில், நாட்டில் பலராலும் எதிர்பார்க்கப்படும் புல்லட் ரயில் திட்டம் குறித்தும் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது.
Bullet Train: புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும்?
நாட்டின் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் சபர்மதி - வாபி இடையே இயக்கப்படும் என்றும் வரும் 2028ஆம் ஆண்டு முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என CNN-News18 வெளியிட்ட செய்தியின் மூலம் தெரியவருகிறது. மேலும், 2ஆம் கட்டமாக புல்லட் ரயில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த புல்லட் ரயில் சேவையும் 2030ஆம் ஆண்டில் செயல்பாட்டில் வரும் என தகவல்கள் கூறுகின்றனர்.
Bullet Train: புல்லட் ரயில் சேவை வழித்தடம்
இந்த புல்லட் ரயிலுக்கான கட்டணம் மற்றும் போக்குவரத்து சார்ந்த கணிப்புகளை தீர்மானிக்க தேசிய அதிவேக ரயில் ஆணையம் (NHSRCL) ஒரு பயணிகளிடம் கணக்கெடுப்பை நடத்து வருவதாகவும் தெரிகிறது. CNN-News18 வெளியான செய்தியின்படி, 2028இல் தொடங்கும் சபர்மதி - வாபி இடையேயான புல்லட் ரயில் சேவைக்கும், 2030இல் அகமதாபாத் - மும்பை இடையேயான முழுப் பிரிவிற்கும் பயணிகளின் மதிப்பீடு கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குஜராத் - மகாராஷ்டிரா இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வருகிறது. அதில், மகாராஷ்டிராவின் மும்பை - பாந்த்ரா குர்லா வழித்தடம் (BKC), தானே, விரார், போய்சர் வழியாக அமைகிறது. குஜராத்தின் வாபி, பிலிமோரா, சூரத், பருச், வதோதரா, ஆனந்த், அகமதாபாத், சபர்மதி வரை நீள்கிறது. புல்லட் ரயில் சேவைக்காக மொத்தம் 508 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. குஜராத்தில் மட்டும் சுமார் 348 கி.மீட்டர், மகாராஷ்டிராவில் 156 கி.மீட்டருக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
Bullet Train: மத்திய இணை அமைச்சர் கொடுத்த அப்டேட்
முன்னதாக, புல்லடர் ரயிலுக்கு ஏற்ற வகையில், குஜராத்தின் சூரத் நகரில் நாட்டின் முதல் ரயில் நிலையம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றும் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான அரசின் இந்த லட்சிய புல்லட் ரயில் திட்டம் நன்றாகவும் தெளிவான பாதையில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்திருந்தார். அடுத்தாண்டில் புல்லட் ரயில்களுக்கான சோதனை ஓட்டங்கள் தொடங்கும் என்றும், முழு செயல்பாடுகளும் 2029ஆம் ஆண்டில் தொடங்கப்படலாம் என்றும் அமைச்சர் அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
குஜராத்தின் டைமண்ட் நகரத்திற்கு அருகில் 40 மீட்டர் நீளமுள்ள கர்டர் பாலங்களின் பணிகள் தொடங்கப்பட்டது. இதன்மூலம், அதிவேக ரயில் பாதையை சுமந்து செல்லும் உயர்த்தப்பட்ட பிரிவுகளான 300 கி.மீ., தூரம் கொண்ட பாலங்களின் பணியும் நிறைவடைந்ததாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் (NHSRCL) தெரிவித்திருந்தது. அதன்பிறகே மத்திய இணை அமைச்சரின் இந்த பதிவும் வந்தது.
Bullet Train: ரயில்வே துறை அமைச்சர் சொல்வது என்ன?
மொத்தம் 508 கி.மீ., நீளமுள்ள இந்த புல்லட் ரயில் வழித்தடத்திற்கு தற்போது நடைபெற்று முடிந்த பணிகள் என்பது ஒரு பெரிய உந்துதலை கொடுக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். மேலும் அவர், "ஜப்பான் அரசின் ஆதரவுடன் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கும் வகையில், இந்திய உள்கட்டமைப்பிற்கு இது முதல்முறையாகும்" என்றார். மொத்த 300 கி.மீ. மேம்பால அமைப்பில்ல், 257.4 கி.மீட்டருக்கு FSLM என்ற முறை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இதில் 14 நதி பாலங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 1ம் தேதி முதல் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை! மாநில அரசு முடிவு!
மேலும் படிக்க | பஹல்காம் சம்பவம்: 'பெண்களுக்கு போதிய வீரம் இல்லை' பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









