இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. புதிய ஆடைகள் மற்றும் வெடிகள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் தொடர் விடுமுறைகளை அறிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது வரை மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களில் ஆறு நாட்கள் வரையிலும், பிற மாநிலங்களில் தேர்தல் மற்றும் இதர காரணங்களுக்காக 10 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அதிமுக கூட்டம் கட்டுக்கோப்புடன் நடந்தது நேர் மாறாக தவெக கட்சி நிகழ்ச்சி இருந்தது!
பல்வேறு மாநிலங்களில் விடுமுறை நிலவரம்
வட இந்திய மாநிலங்களில் தன்தேரஸ், சோட்டி தீபாவளி, முக்கிய தீபாவளி, கோவர்தன் பூஜை மற்றும் பாய் தூஜ் என ஐந்து நாட்கள் பண்டிகை களைகட்டும். இதன் காரணமாக, அக்டோபர் 18 முதல் 23 வரை ஆறு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒவ்வொரு மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்தெந்த மாநிலங்களில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த முழுமையான தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தமிழ்நாடு: தமிழகத்தை பொறுத்தவரை, அக்டோபர் 18 (சனி), 19 (ஞாயிறு) மற்றும் 20 (திங்கள்) என மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோரின் வசதிக்காக, அக்டோபர் 21ம் தேதியும் (செவ்வாய்) சிறப்பு விடுமுறை அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்: இந்த மாநிலங்களில் அக்டோபர் 20 முதல் 23 வரை அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்தால், மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மேற்கு வங்கத்தில் காளி பூஜை மற்றும் பாய் தூஜ் கொண்டாட்டங்களும் இந்த விடுமுறையில் அடங்கும்.
கர்நாடகா: கர்நாடகாவில் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதால், பள்ளிகளுக்கு ஏற்கனவே அக்டோபர் 8 முதல் 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனுடன், அக்டோபர் 19 (ஞாயிறு) மற்றும் 20 (தீபாவளி) விடுமுறையும் இணைவதால், மாணவர்களுக்கு மொத்தமாக 13 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில மாணவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் நீண்ட விடுமுறையுடன் வந்துள்ளது. அக்டோபர் 13ம் தேதியே தொடங்கிய விடுமுறை, தீபாவளிக்கு பிறகும் தொடர்ந்து அக்டோபர் 22 வரை நீடிக்கிறது. இதனால், அம்மாநில மாணவர்கள் மொத்தம் 12 நாட்கள் விடுமுறையைக் கொண்டாடுகின்றனர்.
பிகார்: பிகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டும், தீபாவளி மற்றும் அதை தொடர்ந்து வரும் சாத் பூஜை கொண்டாட்டங்களுக்காகவும், அக்டோபர் 20 முதல் 29ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கரூர் சம்பவம்: அமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை - டென்ஷன் ஆன இபிஎஸ் - அதிமுக அமளி ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









