இந்தியாவில் ராணுவத்தில் பணி புரிவது மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும். மற்ற துறைகளை தாண்டி ராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு தனி மரியாதையும் அந்தஸ்தும் கிடைக்கும். அதேபோல இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்வதும் அவ்வளவு எளிதல்ல, பலவித தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை தாண்டி தான் இந்திய ராணுவத்தில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இந்திய நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு மாத சம்பளம் போக பல்வேறு சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் சிப்பாய்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பல்வேறு பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் இதர சலுகைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்திய ராணுவத்தில் சம்பளம் 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மேலும் படிங்க: பாகிஸ்தான் ட்ரோன்களை பந்தாடும் S400! இதன் விலை எவ்வளவு தெரியுமா?
சம்பள விவரம்:
லெப்டினன்ட்: ரூ. 56,100 – ரூ. 1,77,500
கேப்டன்: ரூ. 61,300 – ரூ. 1,93,900
மேஜர்: ரூ. 69,400 – ரூ. 2,07,200
லெப்டினன்ட் கர்னல்: ரூ. 1,21,200 – ரூ. 2,12,400
கர்னல்: ரூ. 1,30,600 – ரூ. 2,15,900
பிரிகேடியர்: ரூ. 1,39,600 – ரூ. 2,17,600
மேஜர் ஜெனரல்: ரூ. 1,44,200 – ரூ. 2,18,200
லெப்டினன்ட் ஜெனரல்: ரூ. 1,82,200 – ரூ. 2,24,100
கொடுப்பனவுகள் மற்றும் இதர சலுகைகள்
மாத சம்பளங்களை தாண்டி ராணுவத்தில் உள்ள வீரர்கள் பலவித கொடுப்பனவுகளும் கிடைக்கிறது. அதன்படி அகவிலைப்படி (DA), ராணுவ சேவை ஊதியம் (MSP), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு, மலை பகுதிகளில் இருப்பவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு (ரூ. 1,600 to ரூ.16,900), சிறப்புப் படை கொடுப்பனவு (ரூ. 25,000), சீருடை கொடுப்பனவு (ரூ. 20,000) போன்றவற்றை வழங்கபடுகிறது.
ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் பிற நன்மைகள்
இந்திய இராணுவம் தனது பணியாளர்களுக்கு பல்வேறு கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கப்படுகிறது. மாதாந்திர கேண்டீன் வசதி மூலம் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், மின்னணு பொருட்கள் வழங்கப்படுகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவப் பலன்கள் வழங்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மானிய விலையில் கல்வி சலுகை வழங்கப்படுகிறது. அதே போல ராணுவ விடுதி வழங்கப்படுகிறது. இராணுவக் குழு காப்பீட்டு நிதி மூலம் ரூ. 75 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
மேலும் படிங்க: S400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானது-விக்ரம் மிஸ்ரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ