)
Richest Indians In 2025: 2025ஆம் ஆண்டின் இந்திய பெருங்கோடீஸ்வரர் பட்டியல் (M3M Hurun India Rich List 2025) தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, M3M India என்ற அமைப்புடன், Hurun ஆராய்ச்சி நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.பெருங்கோடீஸ்வரர்களின் பட்டியல் 14வது ஆண்டாக இவை வெளியிட்டு வருகின்றன.
கடந்த 13 ஆண்டுகளை விட இந்தாண்டுதான் பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதாவது இந்தாண்டு இந்தியாவில் 350 பெருங்கோடீஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுல்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட பட்டியலின் எண்ணிக்கையை விட 6 மடங்கு தற்போது அதிகமாகி உள்ளது. மேலும், இந்த 350 பெருங்கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடியாகும். அதாவது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 50% ஆகும்.
கடந்தாண்டு கௌதம் அதானி முதலிடத்தை பிடித்து, முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய நிலையில், இந்தாண்டு முதலிடத்தை மீண்டும் முகேஷ் அம்பானி கைப்பற்றியிருக்கிறார். கௌதம் அதானி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். கடந்தாண்டு ரூ.11 லட்சம் கோடியுடன் இருந்த அதானி, தற்போது அவருடைய சொத்து குவிப்பு ரூ.8.14 ஆக குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி கடந்தாண்டு ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்பு வைத்திருந்த நிலையில், இந்தாண்டு அது ரூ.9.55 ஆக குறைந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல்முறையாக 3வது இடத்தை ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடியாகும். மேலும், நாட்டின் பெருங்கோடீஸ்வர பெண் என்ற பெருமையை ரோஷினி நாடார் பெற்றுள்ளார். இவர் HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள் ஆவார்.
மேலும், சென்னையைச் சேர்ந்தவரும், Perplexity இணை நிறுவனருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.21,190 கோடியாகும். இவர்தான் நாட்டின் இளமையான பெருங்கோடீஸ்வரர் ஆவார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் மொத்தம் 350 பேரில் 101 பெண்கள் ஆவர். இதில் 26 பேரின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களை தாண்டுகிறது. மேலும், தானாக உருவான பெருங்கோடீஸ்வரர்களே இந்த பட்டியலில் அதிகம் இருக்கின்றனர், இந்த பட்டியலில் 66% சதவீதத்தினர் அவர்கள்தான். மேலும், இந்த பட்டியலில் சுமார் 74% புதியவர்கள்தான்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் முதல்முறையாக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும், நாட்டின் பெருங்கோடீஸ்வரர் திரைப்பட நட்சத்திரம் ஷாருக் கான் ஆவார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ