Cough Syrup Death Latest News Updates: மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மோசமான இருமல் மருந்துகளை உட்கொண்டதால் சுமார் 13 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு காரணமானவராக கருதப்படும் மருத்துவர் பிரவீன் சோனி நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் குழந்தைகளுக்கு இந்த இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார்.
Cough Syrup Death: இருமல் மருந்தில் இருந்தது என்ன?
Coldrif என்ற இருமல் சிரப் மருந்தை உட்கொண்டதை தொடர்ந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் ஸ்ரீசன் பார்மசூட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் diethylene glycol (DEG) சுமார் 48.6% அளவில் இருந்ததாகவும், இதனால்தான் சிறுநீரக செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cough Syrup Death: யார் இந்த பிரவீன் சோனி?
கைது செய்யப்பட்ட பிரவீன் சோனி ஒரு அரசு மருத்துவர் ஆவார். ஆனால் இவர் சிந்த்வாரா மாவட்டத்தின் பரார்சியா பகுதியில் தனியாக கிளிக் வைத்தும் நடத்தி வருகிறார். உயிரிழந்த குழந்தைகள் பெரும்பாலானோர் இவரது கிளிக்கில்தான் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்னைகளால் அவர்கள் முதலில் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதன்பிறகே உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. அவர்களின் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீர் வெளியேறுவதும் மிகவும் குறைந்திருக்கிறது. உடற்கூராய்வில் அவர்களின் சிறுநீரகத்தில் DEG-ல் விஷத்தன்மையை கண்டறிந்துள்ளனர்.
Cough Syrup Death: இருமல் மருந்துக்கு தடை
சென்னையில் மருந்து பரிசோதனையகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிலையான தரம் இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உறுதிசெய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் Coldriff இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. Nextro-DS இருமல் மருந்துக்கும் மத்திய பிரதேசம் முன்னெச்சரிக்கை தடை விதித்துள்ளது. அதன் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
Cough Syrup Death: விசாரணை
உயிரிழந்த மொத்தம் 13 பேரில், 11 குழந்தைகள் பரார்சியா நகரத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் சிந்த்வாரா நகரம் மற்றும் சௌராய் நகரத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர். இநிறுவனத்தின் உற்பத்தி நடைமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களே ஸ்வீட் எடுங்க... தீபாவளி பரிசாக DA உயர்வு - மாநில அரசு அறிவிப்பு
மேலும் படிக்க |முதலிரவு வேண்டாம் என்ற மனைவி..கடைசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









