தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று ஜம்மு பிரிவு ஆணையர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் நள்ளிரவில் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு முழு விவரங்களை இன்று காலை 10 மணிக்கு வழங்க உள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு அடுத்து சில பெரிய முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது, இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்று இரு நாட்டு ராணுவமும் தயாராக உள்ளனர்.
மேலும் படிக்க | தயார் நிலையில் இந்தியா! பாகிஸ்தான் எந்த எந்த பகுதியில் தாக்குதல் நடத்தும்?
ஏற்கனவே இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு விமானத்தையும் இயக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பொதுமக்கள் வாழும் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய உள்ளது. இதில் தற்போது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
"மே 06ம் தேதி இரவு பாகிஸ்தான் இராணுவம் தன்னிச்சையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களும் அடங்கும். கண்மூடித்தனமான துப்பாக்கிச் சுட்டு தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்திய இராணுவம் விகிதாசார முறையில் பதிலடி கொடுத்து வருகிறது" என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ள்ளது.
மேலும் படிக்க | India Attack Pakistan: விமானங்கள் இயங்காது! பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









