Operation Sindhoor: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Operation Sindhoor Discussion In Parliament: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (ஜூலை 28) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உரையாற்றினார்.
India Pakistan Ceasefire: எவ்வித உரையாடலும் இல்லை
அப்போது பேசிய அவர், "ஏப்ரல் 22ஆம் தேதி (பகல்காம் பயங்கரவாத தாக்குதல்) முதல் ஜூன் 17ஆம் தேதி (போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதி) வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும், டிரம்பிற்கும் இடையே எந்தவித தொலைப்பேசி உரையாடலும் நடைபெறவில்லை. எந்த கட்டத்திலும் வர்த்தகத்திற்கும், என்ன நடக்கிறது என்பதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை..." என தெரிவித்துள்ளார்.
India Pakistan Ceasefire: 26 முறை கூறிய டொனால்ட் டிரம்ப்
பகல்காம் தாக்குதலை தொடர்ந்தும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்தும் இந்தியா - பாகிஸ்தான் இடையே மாறி மாறி வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்படப்டது. இதை இந்தியா, பாகிஸ்தான் அறிவிப்பதற்கு முன்னர் முதலாவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே அறிவித்தார். அதாவது, போரை நிறுத்தாவிட்டால் உங்கள் நாட்டுடனான வணிகத்தை நிறுத்திவிடுவேன் என தான் இரு நாட்டிடமும் கூறியதாக தெரிவித்தார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை கொண்ட வர தான் வணிகத்தை பயன்படுத்தியதாக சுமார் 26 முறை டிரம்ப் தெரிவித்ததாக காங்கிரஸ் எம்பியும் கௌரவ் கோகாய் கூறியிருந்தார்.
India Pakistan Ceasefire: நடந்தது இதுதான்!
தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான மோதல் காலகட்டத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து ஜெய்சங்கர் பேசுகையில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியை அழைத்து, பாகிஸ்தானில் இருந்து ஒரு பெரிய தாக்குதல் குறித்து எச்சரித்ததாகக் கூறினார். அதற்கு, இந்தியா இன்னும் வலுவாக பதிலடி கொடுக்கும் என்று மோடி பதிலளித்ததாக ஜெயசங்கர் கூறினார். மேலும் மே 9 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது என ஜெய்சங்கர் கூறினார்.
மே 10ஆம் தேதி அன்று பல நாடுகள் இந்தியாவைத் தொடர்பு கொண்டு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறினார். ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) வழியாக வந்தால் மட்டுமே பாகிஸ்தானிடம் இருந்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைப் பரிசீலிப்பதாக இந்தியா அனைத்து நாடுகளுக்கும் தெளிவுபடுத்தியதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். இதன்மூலம், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டும் காரணமில்லை என ஜெய்சங்கர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ