தேர்தல் ஆணையம் ஒரு 'வாட்ஸ்அப் கமிஷன்' -உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி அடுக்கிய சரமாரி புகார்கள்

CM Mamata Banerjee Moves SC: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு சரிபார்ப்பு முறைக்கு (SIR) எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார். தேர்தல் ஆணையம் ஒரு "வாட்ஸ்அப் கமிஷன்" என்று சாடிய அவர், பல குற்றச்சாற்றுக்களை முன் வைத்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 4, 2026, 03:29 PM IST
தேர்தல் ஆணையம் ஒரு 'வாட்ஸ்அப் கமிஷன்' -உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி அடுக்கிய சரமாரி புகார்கள்

Mamata Banerjee Latest News: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அங்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (SIR) முறைக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, தேர்தல் ஆணையத்தின் (ECI) செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். இன்று SIR விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மம்தா பானர்ஜி இடையே என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மம்தா பானர்ஜியின் முன்வைத்த முக்கிய வாதங்கள்

நீதி கிடைப்பதில்லை

எங்கள் வழக்கறிஞர்கள் ஆரம்பத்திலிருந்தே போராடி வருகிறார்கள். ல் எல்லாம் முடிந்த பிறகு எங்களுக்கு நீதி கிடைப்பதில்லை. நான் ஆறு முறை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை. நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள், எனக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறேன் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் ஆணையம்

தேர்தல் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதைக் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்தை "வாட்ஸ்அப் ஆணையம்" (WhatsApp Commission) என்று அவர் விமர்சித்தார்.

வங்காளம் குறிவைக்கப்படுகிறது

அசாம் அல்லது வடகிழக்கு மாநிலங்களில் ஏன் இந்தச் செயல்முறை நடக்கவில்லை? மேற்கு வங்கத்தை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? 2 ஆண்டுகள் நடக்க வேண்டிய வேலைகளை 3 மாதங்களில் முடிக்கத் துடிப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வாக்காளர் நீக்கம்

இந்த SIR செயல்முறை வாக்காளர்களைச் சேர்க்கப் பயன்படவில்லை. அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்கவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகத் திருமணமான பெண்கள் தங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வது அல்லது கணவரின் பெயரைப் பயன்படுத்துவதை ஒரு காரணமாகக் காட்டி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது

ஆதார் அட்டை ஒரு அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபோது வங்காள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆதார் அட்டையை ஒரு ஆதாரமாக ஏற்க நீதிமன்றம் அனுமதித்தும், தேர்தல் ஆணையம் அதை மறுப்பதாக அவர் கூறினார். அதேபோல மற்ற மாநிலங்களில், இருப்பிடச் சான்றிதழ், குடும்பப் பதிவு அட்டை, அரசு வீட்டு வசதி அட்டை, சுகாதார அட்டை ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன என்றார்.

குடியுரிமை

2002-ஆம் ஆண்டை ஒரு தன்னிச்சையான கட்-ஆஃப் தேதியாக வைத்துக்கொண்டு மக்களின் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அவர் வாதிட்டார்.  மேலும் எஸ்ஐஆர் செயல்முறையின் போது தேர்தல் அதிகாரிகள் உயிரிழந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தில் நடந்த சில சுவாரஸ்யமான விசியங்கள்

தனது வாதங்களைத் தொடங்கிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசும் போது, தலைமை நீதிபதி காந்த் குறுக்கிட்டு, "மேடம் பானர்ஜி" என்றார்.

நீங்கள் எனக்கு 5 நிமிடங்கள் மட்டும் அனுமதித்தால்.. என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டபோது, தலைமை நீதிபதி காந்த் நம்பிக்கையூட்டும் விதத்தில், "நாங்கள் உங்களுக்கு 5 நிமிடங்கள் அல்ல, 15 நிமிடங்கள் தருகிறோம்" என்றார்.

அதன்பிறகு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கிட்டபோது, ​​மம்தா பானர்ஜி "கைகூப்பி" வணங்கி, "தயவுசெய்து என்னை அனுமதிக்கவும், ஐயா!" என்றார்.

பின்னர் தொடர்ந்து தனது வாதங்களை மம்தா பானர்ஜி வைத்த போது, தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் அவரது வாதங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்தபோது, ​​தலைமை நீதிபதி காந்த் குறுக்கிட்டு, "அம்மா அவர்கள் இவ்வளவு தூரம் பேசுவதற்காகவே வந்திருக்கிறார்கள்", நீங்கள் அமைதியாக இருங்கள்" எனக் கூறினார்

இறுதியாக விசாரணை முடிந்ததும், மம்தா பானர்ஜி கைகூப்பி, "நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்றார்.

உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கள் என்ன?

1 தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், மம்தா பானர்ஜியின் வாதங்களைக் பொறுமையாகக் கேட்டார்.

2. மேற்கு வங்க மாநிலம் தனது சொந்த உரிமைக்காக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறந்த சட்டக் குழுவினர் மாநிலத்தின் வழக்கை பிரதிநிதித்துவப்படுத்த அங்கே உள்ளனர் என்று நீதிபதி காந்த் கூறினார்.

3. மேற்கு வங்க மாநிலத்தில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களை ஒப்புக்கொண்ட நீதின்றம், அனைவரும் ஒரு தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியது.

4. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. எந்த ஒரு நிரபராதி குடிமகனும் விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதிசெய்ய, நாம் தீர்வை நோக்கிப் பார்க்க வேண்டும் என நீதிபதி காந்த் கூறினார்.

5. எஸ்ஐஆரின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆதார் போன்ற சில விஷயங்களில் நீதிமன்றத்தால் கருத்து தெரிவிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மேலும் கூறினார்.

6. இறுதியாக, அனைத்து வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், வழிகாட்டுதல்களை வழங்கும் என்று உறுதியளித்தது.

எஸ்ஐஆர் (SIR)-க்கு எதிரான மனுக்கள்

கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையம் பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எஸ்ஐஆர் (SIR) செயல்முறையை நடத்தியது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு (NFIW) உள்ளிட்ட அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள், இந்த செயல்முறையின் சட்டப்பூர்வ தன்மையை எதிர்த்து சவால் விடுத்தன. இருப்பினும், உச்ச நீதிமன்றம் இதற்கு எந்தத் தடையும் விதிக்காததால், தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் செயல்முறையைத் தொடர்ந்தது.

அதன்பிறகு, தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் (SIR) செயல்முறையை மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தியது. இது தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜனவரி 29 அன்று நீதிமன்றம் இந்த மனுக்கள் மீதான தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தை அணுகிய மம்தா பானர்ஜி

இதையடுத்து, மாநிலத்தில் எஸ்ஐஆர் செயல்முறையை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றத்தை அணுகினார். தனது மனுவில், "கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட தற்போதைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல்களை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார். வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை, குறிப்பாக 'தர்க்கரீதியான முரண்பாடு' (Logical Discrepancy) பிரிவின் கீழ் உள்ளவர்களை நீக்குவதை நிறுத்த அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தகுதியுள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என்ற உடனடி மற்றும் மீளமுடியாத அச்சுறுத்தல் குறித்து அச்சம் தெரிவித்தார். இது தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான சமமான போட்டிச் சூழலைக் குலைக்கும் என்று" கூறியுள்ளார்.

மேலும் படிக்க - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்

மேலும் படிக்க - புதிதாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்துள்ளீர்களா? முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க - S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? தமிழ்நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News